»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: இப்பவே உண்மையை சொன்ன சத்யராஜ்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: இப்பவே உண்மையை சொன்ன சத்யராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலியை ஏன் கொன்றேன் என்ற காரணத்தை சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் பாகுபலியை கொன்றுவிடுவார்.

கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்பது இரண்டாம் பாகமான பாகுபலி 2 படம் மூலம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகிறது. இந்நிலையில் பாகுபலி படக்குழுவினர் கலந்து கொண்ட பிரமாண்ட நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது.

ராஜமவுலி

ராஜமவுலி

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்த பாகுபலி 2 நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரும் பங்கேற்றார்.

சத்யராஜ்

சத்யராஜ்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யராஜிடம் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, தயாரிப்பாளர்கள் நிறைய பணம் கொடுத்தார்கள், ராஜமவுலி சொன்னதால் பாகுபலியை கொன்றேன் என்றார்.

பிரபாஸ்

பிரபாஸ்

ராஜமவுலி சொன்னதால் தான் பாகுபலியை கொன்றேன். இல்லை என்றால் என் டார்லிங் பிரபாஸை போய் நான் எப்படி கொல்வேன் என்று சத்யராஜ் தனக்கே உரிய ஸ்டைலில் கூறினார்.

  English summary
  Sathyaraj has given answer to the question, Why Katappa killed Baahubali? at pre-release function of Baahubali 2 in Hyderabad.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil