»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? அந்த ரகசியம் 3 பேர் தவிர யாருக்கும் தெரியாதாம்!

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? அந்த ரகசியம் 3 பேர் தவிர யாருக்கும் தெரியாதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியான கட்டப்பா பாகுபலியை கொலை செய்தது ஏன் என்ற ரகசியம் 3 பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதாம்.

சரித்திர படமான பாகுபலி படத்தை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ளார் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, சத்தியராஜ் நடித்துள்ளனர். 'பாகுபலி தி பிகினிங்' கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு வசூலில் சாதனை படைத்தது.


Why did kattappa kill Baahubali? A Secret known to only 3 people

படத்தின் இறுதியில் பாகுபலியை கொன்றது யார் என்ற கேள்விக்கு நான்தான் பாகுபலியை கொன்றேன் என்று கட்டப்பா கூறுவதோடு முடியும். இந்த சஸ்பெண்ஸ்க்கு விடை கிடைத்தபாடில்லை.


கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கான விடையை பலரும் பலவிதமாக கூறி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கேள்வி பலராலும் பலவிதமாக கேட்கப்பட்டு விட்டது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இந்த கேள்விக்கான விடையை சொல்லவில்லை. கேட்பவர்களுக்கு எல்லாம் புன்னகையை மட்டுமே பதிலாக தருகிறார் ராஜமவுலி.


கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்ற கேள்விக்கான விடை, அந்த கதையை எழுதிய எழுத்தாளர், இயக்குநர் ராஜமவுலி, படத்தின் ஹீரோ பிரபாஸ் ஆகியோருக்கு மட்டுமே தெரியுமாம். அந்த அளவிற்கு இந்த கேள்விக்கான விடையை பொக்கிஷமாக பொத்தி பொத்தி காத்து வருகின்றனர். சமீபத்தில்தான் அந்த காட்சியை படமாக்கினார்களாம். படக்குழுவினர் ஒரு சிலர் மட்டுமே இருந்தார்களாம்.


பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் ஹீரோ பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 23ம் தேதி பாகுபலி 2வின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.English summary
Finally , the way too much awaited a question as to Why did kattappa kill Baahubali was filmed yesterday. The epic historical fiction film "Baahubali: The Beginning" starring Prabhas, was a massive hit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil