கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: இப்படி சஸ்பென்ஸை உடைச்சிட்டாரே தமன்னா
ஹைதராபாத்: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற சஸ்பென்ஸ் குறித்து பேசியுள்ளார் தமன்னா.
பாகுபலி 2 படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தமன்னா கூறும்போது,

பாகுபலி 2
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர். அந்த காரணத்தை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.

காரணம்
படம் துவங்கிய 5 நிமிடத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தெரிந்துவிடும். இந்த கேள்வி இவ்வளவு பெரிய அளவில் ரீச்சாகும் என்று யாருமே முதலில் நினைக்கவில்லை.

ஷாருக்கான்
பாகுபலி 2 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கவுரவத் தோற்றத்தில் வருவதாக சொல்வதில் உண்மை இல்லை. யாரும் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தெரியும்
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என எனக்கு தெரியும். உண்மை தெரிந்த சிலரில் நானும் ஒருத்தி. ஆனால் அதை நான் சொல்ல மாட்டேன். முதல் பாகம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் தான் காரணம் தெரிய வந்தது.

ராஜமவுலி
நான் ராஜமவுலியுடன் சண்டை போட்டதாகக் கூறுவது பொய். நல்லா எழுதுகிறார்கள். நான் ராஜமவுலி சாரின் தீவிர ரசிகை. அவரை பார்த்து, பார்த்து வியப்பவள். அது என்றும் மாறாது என்றார் தமன்னா.


Click it and Unblock the Notifications











