கடைசி நேரத்தில் மைனா நந்தினி பிக் பாஸில் ஏன் கலந்து கொள்ளவில்லை.. இதுதான் காரணமா?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் மைனா நந்தினி கலந்து கொள்வார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளவில்லை.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபரில் முடிந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதையடுத்து, இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அடுத்தடுத்து கசிந்து வந்தன.
இதில், டிடி, பாடகி ராஜலட்சுமி, தர்ஷா குப்தா,ஸ்ரீநிதி, மைனா நந்தினி என பலர் பிக் பாஸில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று ஆடல், பாடல் என மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஜிபி முத்து, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன்,ஆயிஷா, ராம், குயின்ஸ், விஜே கதிரவன், மெட்லி ஒலி சாந்தி, ஷிவின் கணேஷன், தனலட்சுமி, விஜே மகேஷ்வரி, அமுதவாணன், விக்ரமன், மாடல் நிவாஷினி என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏமாந்த ரசிகர்கள்
இதில் நடிகை மைனா நந்தினியின் பெயர் கடைசி பட்டியலிலும் இடம் பெற்று இருந்ததால், இந்த நிகழ்ச்சியில் கட்டாயம் அவர் கலந்து கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில் மைனா நந்தினி நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதுதான் காரணம்
நடிகை மைனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பிரபல நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும், அவருக்கு திடீரென கொரோனா இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் உடல் நிலைசரியானதும் வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சியில் சர்ப்ரைசாக என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களில் பிஸி
விஜய் டிவியின் ஆஸ்தான முகங்களில் ஒருவராக வலம் வரும் மைனா நந்தினி, தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். இதுதவிர மற்ற சில படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











