அவ்வளவு நெருக்கமாக இருந்தாங்களே.. என்னாச்சு? விஜய்யை பிரிந்த ராஷ்மிகா மந்தனா.. "அதுதான்" காரணமாமே!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவர கொண்டாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இவர்கள் பிரிய முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா முதலில் ரக்ஷித் ஷெட்டி என்ற நடிகரை காதலித்து வந்தார். இவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.
இதையடுத்து இவர்கள் இடையே நிச்சயதார்த்தம் கூட நடந்தது. ஆனால் அதற்குள் இவர்களுக்கு இடையில் சண்டை வந்து இருவரும் பிரிந்துவிட்டனர்.

பிரிந்தனர்
இதையடுத்து சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கு, தமிழ் மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடிக்க தொடங்கின. தமிழிலும் விஜய் உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்களுடன் ராஷ்மிகா மந்தனா நடிக்க தொடங்கினார். வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய் கூட நடித்து இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. ஆனாலும் கூட இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு, டான்ஸ் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

பாராட்டு
இந்த நிலையில்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவர கொண்டாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. இவர்கள் பிரிய முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. மந்தனா தேவர கொண்டாவை டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே படத்தில் நடித்தனர். இவர்கள் நெருக்கம் ஆகி காதலில் விழுந்தனர். இதை வெளிப்படையாக எங்கும் இருவரும் சொன்னது இல்லை. ஆனால் சில இடங்களில் ராஷ்மிகா மந்தனா மறைமுகமாக இதை குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது தானும் தேவர கொண்டாவும் காதலிப்பதாக மறைமுகமாக சில இடங்களில் சொல்லி இருக்கிறார்.

காதல்
அதோடு இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி உள்ளன. இவர்கள் ஒன்றாக பாலி உள்ளிட்ட தீவுகளுக்கு சென்றது. அங்கே ஒரே இடத்தில் தனி தனியாக போட்டோ போட்டது என்று மறைமுகமாக தாங்கள் டேட்டிங் செய்ததை பற்றி குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் எங்கும் வெளிப்படையாக இதை சொன்னதே இல்லை. இந்த நிலையில்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவர கொண்டாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.

சண்டை
இவர்கள் பிரிய முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டைதான் இவர்கள் பிரிய காரணம். அதே சமயம் வேறு ஒரு முக்கிய காரணமும் இவர்களுக்கு இடையில் உள்ளது. அதன்படி பாலிவுட் நடிகை ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தேவரகொண்டா ராஷ்மிகாவை பிரிந்துவிட்டதாகவும், தெலுங்கு ஹீரோ ஒருவருடன் ஏற்பட்ட நட்பால் ராஷ்மிகாவும் இந்த காதலில் தொடர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











