கமலின் பிறந்த நாள் பார்ட்டி..ஸ்ருதி கலந்துகொள்ளாதது ஏன்? கேள்வி கேட்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் 68வது பிறந்த நாள் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நேற்று நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் கமல்ஹாசன் தனது இளைய மகள் அக்ஷராவுடன் ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பார்ட்டியில் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் ஸ்ருதி ஹாசன் மட்டும் கலந்து கொள்ளாததால், ரசிகர்கள் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேள்வி கேட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன்
நடிகர், கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் திறமையைக்கொண்டவர் கமல்ஹாசன். சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார்.

450 கோடி
கமல்ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பின் விக்ரம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இப்படத்தில் மிரட்டலாக நடித்திருந்த கமல், பத்தல பத்தல என்று சொல்லியே 450 கோடியை வசூலித்து உலகையே தன் பக்கம் திருப்பினார். விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 பஞ்சாயத்தும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்தியன்2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி
இந்நிலையில் நேற்று, கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவை திரையுலக நண்பர்களுடன் கொண்டாடினார். இதில் கமல் தனது இளைய மகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பார்ட்டியில், ராதிகா, பார்த்திபன்,எஸ். சூர்யா, பிந்து மாதவி மற்றும் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பார்ட்டிக்கு வரவில்லை
இந்த விழாவில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் கலந்து கொண்டார். ஆனால்,ஸ்ருதி ஹாசன் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ருதி தனது காதலருடன் மும்பையில் லிவ்விங் டு கெதர் உறவு முறையில் இருந்து வருகிறார். இதனால், எந்த காரணத்திற்காகவும் அவர் சென்னைக்கு வருவதே இல்லை. அப்பாவின் பிறந்த நாளுக்காவது நேரில் வந்து வாழ்த்து கூறி இருக்கலாம் என நெட்டிசன்கள் கோபமாக கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











