கமல் சொன்ன அந்த ரகசியம் என்ன? தாடி பாலாஜி ஏன் கீழே விழுந்து அழுதார்?
புதியவர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் வாய்ப்பை எவ்வாறு தவறவிடக்கூடாது என்பதற்கு அபிராமிக்கு புத்திச் சொன்னார் கமல்ஹாசன். அப்போது அவரது பேச்சில் வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்பதில் தாம் எவ்வாறு உறுதியாக இருந்தது குறித்து கூறினார். அப்போது கமல் சொன்ன ஒரு வார்த்தையைக்கேட்டு தாடி பாலாஜி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து குலுங்கி குலுங்கி அழுதார். அது என்ன என புரியாமல் பார்வையாளர்கள் குழம்பி வருகின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியைத்தொடர்ந்து டிஸ்னி ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்புகிறது. ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய நிகழ்ச்சி அது. இதில் கடந்த 5 சீசன்களில் கலந்துக்கொண்டோர் 17 பேர் பங்கேற்றனர். 7 வாரங்கள் நடக்கும் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் வாசகர்கள் நிகழ்ச்சியை பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை கமல் தொகுத்து வழங்குவார், எவிக்ஷனும் உண்டு.

ஞாயிற்றுக்கிழமை என்றால் சிறப்பு
நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்ப்பார்ப்பது கமல் வரும் ஞாயிற்றுக்கிழமையைத்தான். மாலை 6-30 மணிமுதல் 3 மணி நேரம் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கமல் தனக்கே உரிய குறும்பு, கேலி, அறிவுரை கூறுதல் என நிகழ்ச்சியை கொண்டுச் செல்கிறார். கடந்த வார நிகழ்வுகளை எடுத்து அதில் உள்ள நிறை குறைகளை சொல்வது அவரது வழக்கம்.

வாய்ப்புகளை தவறவிட்டவர்களை கண்டித்த கமல்
அப்படி நேற்றைய நிகழ்ச்சியில் பேசும்போது கல்லூரி நிகழ்ச்சியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்யாதவர்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது அபிராமியிடம் அவர் பேசினார். நாட்டியம் பயின்ற நீங்கள் அபிநயம் காட்ட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட சான்சை வீணடித்துவிட்டீர்களே என வருத்தப்பட்டார். உங்களுக்கெல்லாம் ஒன்று புரியவில்லை, இதுபோன்ற வாய்ப்பு இனி கிடைக்குமா? கிடைக்கும் வாய்ப்பை விடலாமா என கேள்வி எழுப்பினார்.

வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுங்கள் கமல் கூறிய அறிவுரை
இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தப்போதெல்லாம் தான் எவ்வாறு கஷ்டப்பட்டு அதை பயன்படுத்திக்கொண்டேன் என கமல் சில உதாரணங்களைச் சொன்னார். என்னைவிட திறமைசாலிகள் எவ்வளவோபேர் வாய்ப்பில்லாமலேயே போய்விட்டார்கள், அதனால கிடைத்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள் என சொன்னார் கமல்ஹாசன். இது பிக்பாஸ் வீட்டுக்கு மட்டுமல்ல வெளியிலுள்ளவர்களுக்கும் பொருந்தும், வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுங்கள் என அறிவுரை கூறினார்.

கமல் பேச்சால் கலங்கிய தாடி பாலாஜி
பின்னர் பேசிய கமல், இன்றைக்கு நாம் இதுபோன்ற விஷயங்களை பின்பற்றுவதில்லை, வாய்ப்பு கிடைத்தால் உங்களை நிரூபிக்க எப்போதும் தயங்கக்கூடாது என்று கூறி தனது படத்தை திருப்பி வைக்கவேண்டாம் என தாடி பாலாஜியிடம் கூறினார் (ஏன் சொன்னார் என்பது பற்றி சொல்லாமல் இது எனக்கும் பாலாஜிக்குமானது என்று சொன்னார்) இதைக்கேட்டவுடன் தாடி பாலாஜி சாஷ்டாங்கமாக கமலை நோக்கி தரையில் விழுந்து வணங்கினார். வேண்டாம் பாலாஜி அப்படி செய்யாதீர்கள் என்றார் கமல். பாலாஜி குலுங்கி குலுங்கி அழுதபடி எழுந்து அமர்ந்தார்.

அது என்ன ரகசியம்? ஏன் அழுதார் பாலாஜி
கமல் பேசும்போது தாடி பாலாஜியிடம் சொன்ன அந்த வார்த்தையும், அது தனக்கும் தாடி பாலாஜிக்குமான ஒன்று என்றார் அது என்ன? ஏன் அப்படி சொன்னார். அது என்ன ரகசியம் கமல் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் தாடி பாலாஜி கதறி அழுது தரையில் விழுந்து வணங்க என்ன காரணம்? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











