விஜய் ஏன் த்ரிஷா காரில் வந்தார்? TVK பெண் கொடுத்த உலகமகா விளக்கம்.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து பஞ்சாயத்து கடந்த வாரமே தொடங்கி விட்டது என்றால், விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து திருமண நிகழ்ச்சிக்குச் சென்றது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்படி இருக்கையில் இந்த விவகாரம் விஜய்க்கு எதிரான விஷயமாக மாறியது. பலரும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தனது கட்சி சார்பில் நடத்திய மகளிர் தின விழா கொண்டாட்டம் 2026 இல் கலந்து கொண்ட பெண்கள் பலரும் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஒருவர் கூறுகையில், " விஜய் தனது சொந்த வாழ்க்கை குறித்து அவரே எதிர்கொண்டு கொள்வார். அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலில் மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதுதான் மிகவும் முக்கியமே தவிர, அவரது சொந்த வாழ்க்கை குறித்து நாம் பேசக் கூடாது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் எல்லாம் உங்கள் தோழியுடன் ஒரே காரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டீர்களா? ஒரே மாதிரி டிரஸ் போட மாட்டீர்களா?" என்று எல்லாம் கேள்வி எழுப்பினர்.

த்ரிஷா கார்: மற்றொரு பெண் பேசுகையில், " தளபதி விஜய் காரில் சென்றாலே எப்படியும் சுமார் நூற்றுக் கணக்கான மக்களும் இளைஞர்களும் அவரது காருக்குப் பின்னால் செல்கிறார்கள். எவ்வளவு பேர் அவரது காரைப் பின் தொடர்ந்து வருகிறார்கள். அதனால் தான் அவர் த்ரிஷாவின் காரில் திருமணத்திற்கு சென்றார்" என்று கூறியுள்ளார். இதைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், " இந்த தவெக பெண், தவெக ஆண்களை விட மிகவும் புத்திசாலியாக உள்ளார். இந்த பெண் அவர்கள அனைவரையும் ஓவர் டேக் செய்துவிட்டார்" என்று பதிவிட்டு கலாய்த்துள்ளார்.
விஜய் கமெண்ட்: ஏற்கனவே தவெக தொண்டர்கள் பலரும் விஜய் ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து திருமணத்திற்குச் சென்றது தொடர்பாக என்ன சொல்லி முட்டு கொடுப்பது என்று தெரியவில்லை என்று சமூக வலைதளங்களில் புலம்பிக் கொண்டு இருந்த நிலையில், நடிகர் விஜய் தனது விவாகரத்து சர்ச்சை குறித்து பேசும் போது, நீங்கள் கவலைப்பட வேண்டாம் அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கும் இணையவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











