twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்க கட்டிடத்திற்கு ஏன் பூட்டு போட்டோம்?: காரணம் சொல்லும் ஜே.கே. ரித்தீஷ்

    By Siva
    |

    சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டதற்கான காரணத்தை ஜே.கே. ரித்தீஷ் தெரிவித்துள்ளார்.

    தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீது அதிருப்தி அடைந்த சில தயாரிப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    மனு அளித்த பிறகு இயக்குனர் பாரதிராஜா, ஜே.கே. ரித்தீஷ் ஆகியோர் பேட்டி அளித்தனர்.

    விஷால்

    விஷால்

    கடந்த இரண்டு வருடமாக பொதுக்கூட்டம் நடத்தபடவில்லை. சங்கத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ. 7 கோடி குறித்த விவரம் கேட்டதற்கு தலைவர் மற்றும் துணை தலைவர் பதில் அளிக்கவில்லை. விஷால் ரூ. 7 கோடி குறித்த விபரம் அளிக்க வேண்டும் என்று பாரதிராஜா தெரிவித்தார்.

    தன்னிச்சை

    தன்னிச்சை

    சங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை.
    புதிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து சங்கம் நடத்துவதற்கு காரணம் என்ன? இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளோம் என்று பாரதிராஜா கூறினார்.

    ரூ. 50 கோடி

    ரூ. 50 கோடி

    இளையராஜா ரூ. 50 கோடி வரை சங்கத்திற்கு தர வேண்டிய நிலையில், அவருக்கு ரூ. 3.5 கோடி கொடுத்து நிகழ்ச்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன?.
    தேர்தல் தேதியை அறிவிக்காமல் அதனை தவிர்ப்பதற்காக இளையராஜாவிற்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    எதற்கு வாடகைக்கு கட்டிடம் எடுத்து சங்கம் நடத்த வேண்டும்?. அதற்கு வாடகை சங்கத்தின் மூலம் கொடுக்கப்படுகிறது என்றார் ரித்தீஷ்.

    பூட்டு

    பூட்டு

    சங்க கட்டிடத்தில் உள்ள ஆவணங்கள் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது. அதனால் கட்டிடத்திற்கு பூட்டு போட்டோம். தமிழ் ராக்கர்ஸை நெருங்கிவிட்டேன் என்ற விஷால் அது குறித்து ஆறு மாதங்களாக எந்த தகவலும் அளிக்கவில்லை. அதனால் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தன்மை உள்ளது என்று ரித்தீஷ் தெரிவித்தார்.

    English summary
    JK Ritheesh has revealed the reason for locking TFPC building.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X