சாரு ஹாஸனை போய் ஏன் லவ் பண்ணீங்க, இந்த வயசுல இது தேவையா?: கீர்த்தி பாட்டியை கேட்ட நடிகை

By Siva

Recommended Video

கீர்த்தி சுரேஷின் பாட்டியை கலாய்த்த நடிகை சீமா- வீடியோ

சென்னை: சாரு ஹாஸனை போய் ஏன் லவ் பண்ணீங்க, இந்த வயசுல இது தேவையா? என்று நடிகை சீமா கீர்த்தி சுரேஷின் பாட்டியிடம் கேட்டுள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் அண்ணன் சாரு ஹாஸன் 88 வயதில் ஹீரோவாக நடித்துள்ள படம் தாதா 87. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்துள்ளவர் கீர்த்தி சுரேஷின் 80 வயது பாட்டி சரோஜா.

படம் மற்றும் சாரு ஹாஸன் குறித்து சரோஜா கூறியதாவது,

சாருஹாஸன்

சாருஹாஸன்

என் மகள் மேனகா நடித்த படத்தில் சாரு ஹாஸனும் நடித்தார். அப்போது தான் அவர் எனக்கு பழக்கம். அதில் இருந்து இன்று வரை நல்ல நண்பர்களாக உள்ளோம். ஆசிரியர் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த முதல் ஆள் என் மகள் தான்.

நடிப்பு

நடிப்பு

சாரு ஹாஸன் சாரும் என் குடும்பமும் பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம். அவர் தாதாவாக நடிக்கப் போவதாக ஒரு நாள் செய்தித்தாளில் பார்த்தேன். அவர் இந்த வயதில் நடிக்கும்போது நான் ஏன் நடிக்க முடியாது என்று தோன்றியது.

கேர்ள் பிரெண்ட்

கேர்ள் பிரெண்ட்

சாரு ஹாஸன் சார் என்னை எப்பொழுதுமே கேர்ள் பிரெண்ட் என்று தான் அழைப்பார். அவருக்கு போன் செய்து உங்கள் படத்தில் நடிக்க என்னை பரிந்துரை செய்யலாமே என்றேன். நான் போன் செய்த அரை மணிநேரத்தில் இயக்குனரும், தயாரிப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர். என்னால் நடிக்க முடியுமா, ஆங்கிலத்தில் பேச முடியுமா என்பதை தெரிந்த கொள்ள விரும்பினர். அவர்கள் பேசியதும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

காதல்

காதல்

நானும், என் மகளும் மலையாள நடிகர் சங்க விழாவுக்கு சென்றிருந்தோம். விமான நிலையத்தில் நடிகைகள் சீமா, அம்பிகா ஆகியோரை சந்தித்தோம். இந்த வயசுல உங்களுக்கு லவ் தேவையா என்று சீமா என்னை கலாய்த்தார். சாருஹாஸனை போய் எதுக்கு லவ் பண்ணீங்க? என்றார்.

சின்ன பையன்

சின்ன பையன்

நான் என்ன ஒரு சின்ன பையனையா காதலிச்சேன்? என்னை விட ஒரு பத்து வயசு அதிகமானவர தானே காதலிச்சேன்? என்று நான் சீமாவுக்கு பதில் அளித்தேன் என்கிறார் சரோஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X