விஜய் ரசிகையான நான் ஏன் சர்கார் விழாவை தொகுத்து வழங்கவில்லை?: வி.ஜே. அஞ்சனா
சென்னை: விஜய் ரசிகையாக இருந்தும் தான் ஏன் சர்கார் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கவில்லை என்று அஞ்சனா விளக்கம் அளித்துள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னாவும், தியாவும் தொகுத்து வழங்கினார்கள்.
பிரசன்னா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் பலருக்கும் பிடிக்கவில்லை.

ஏன்?
விஜய்யின் தீவிர ரசிகையான அஞ்சனா சர்கார் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர். இதையடுத்து விஜய் பட நிகழ்ச்சியை ஏன் நீங்கள் தொகுத்து வழங்கவில்லை என்று பலரும் அஞ்சனாவிடம் சமூக வலைதளங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இதை பார்த்த அஞ்சனா விளக்கம் அளித்துள்ளார்.
சர்கார்
இசை வெளியீட்டை விழாவையும் மிஸ் பண்ணிவிட்டேன். உங்களின் அன்பும், ஆதரவும் இன்னும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தை இருப்பதால் வேலை பார்க்க போதிய நேரம் இல்லை. ஆனால் என் தோழிக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் பங்கெடுப்பது நிச்சயம் கவுரவம் தான். கலக்கு மா நீ திவ்யா என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அஞ்சனா.
இல்லை
அஞ்சனாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் என்ன லைட்டா பொறாமையா என்று கேட்க சத்தியமாக இல்லை என்றார் அஞ்சனா.

ருத்ராக்ஷ்
அஞ்சனா அண்மையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ருத்ராக்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். ருத்ராக்ஷுடன் நேரம் செலவிடுவதால் தற்போதைக்கு அவர் வேலைக்கு செல்லவில்லை.


Click it and Unblock the Notifications











