ஏன் என்னை வச்சு படம் பண்ணல? பாலகிருஷ்ணாவின் கேள்விக்கு பயத்துடன் பதில் கூறிய எஸ்எஸ் ராஜமவுலி!
ஹைத்ராபாத்: தன்னை வைத்து படம் பண்ணாதது ஏன் என்ற நடிகர் பாலகிருஷ்ணாவின் கேள்விக்கு இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி பயத்துடன் பதில் கூறியுள்ளார்.
தெலுங்கு மட்டுமின்றி இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்எஸ் ராஜமவுலி. அவரது இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களும் ஒட்டு மொத்த சினிமாத்துறையும் திரும்பி பார்க்கும் வகையில் செம ஹிட்டாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு தொலைக்காட்சியில் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் 'Unstoppable with NBK' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனது சகோதரரான கீரவாணியுடன் பங்கேற்றார் எஸ்எஸ் ராஜமவுலி.

நாம் ஏன் பணியாற்றவில்லை?
இந்த நிகழ்ச்சியில் ஏன் நம் கூட்டணி இதுவரை இணையவில்லை? எனது ரசிகர்களின் இந்த கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என்றும் நடிகர் பாலகிருஷ்ணா எஸ்எஸ் ராஜமவுலியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு உடனடியாக பதில் அளித்த ராஜமவுலி, "பாலகிருஷ்ணாவை என்னால் கையாள முடியாது" என்று பயத்துடன் கூறினார்.

என்னால் சமாளிக்க முடியாது
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஒரே சமயத்தில் மதிக்கும் குணம் கொண்டவர், ஏதேனும் தவறு நடந்தால் அவர் அமைதியை இழந்துவிடுவார். அல்லது ஏதாவது எரிச்சல் ஏற்பட்டால் அப்போது நிலைமை மோசமாகிவிடும், என்னால் சமாளிக்க முடியாது. அதனால் தான் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றார்.

குடைபிடிக்க சொல்ல மாட்டேன்
அதற்கு உடனே ரியாக்ட் செய்த பாலகிருஷ்ணா, "தயாரான பிறகு கேரவனை விட்டு வெளியே வந்தால், திரும்பிப் போக மாட்டேன், குடை பிடிக்கச் சொல்ல மாட்டேன் என்றார்! தொடர்ந்து பேசிய நடிகர் பாலகிருஷ்ணா, ராஜமௌலியிடம், ஏன் ஒரு படத்தை எடுக்க 2-3 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

என்னை சந்தித்தீர்கள்
அதற்கு, பதில் கூறிய இயக்குநர் ராஜமவுலி "சில காட்சிகளை மிஸ் பண்ணிவிடுவேன் என்ற பயம் உள்ளது. எனவே ஒவ்வொரு பிட்டையும் சரிபார்த்துக்கொண்டே இருப்பேன், இதனால் அதிக நேரம் எடுப்பதாக கூறினார் ராஜமவுலி. தொடர்ந்து பேசிய நடிகர் பாலகிருஷ்ணா, ராஜமவுலி ஒரு ஸ்கிரிப்ட்டுடன் தன்னை சந்தித்ததை நினைவுபடுத்தினார்.

மகதீரா கதையுடன் சந்திப்பு
அப்போது பேசிய எஸ்எஸ் ராஜமவுலி, தான் உதவி இயக்குநராக இருந்தபோதும், பின்னர் பிரபாஸுடன் 'சத்ரபதி' படத்தை இயக்கியபோதும் இரண்டு / மூன்று முறை சந்தித்ததாக தெரிவித்தார். மேலும் எஸ்எஸ் ராஜமவுலி நடிகர் பாலகிருஷ்ணாவை 'மகதீரா' திரைக்கதையுடன் சந்தித்தார், ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் ராம் சரணுடன் பணியாற்றினார் ராஜமவுலி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











