»   »  பாவனா கடத்தல்... பலாத்காரம்... வீடியோ ரெகார்டிங்.. ஏன் இந்த கொடூரம்?

பாவனா கடத்தல்... பலாத்காரம்... வீடியோ ரெகார்டிங்.. ஏன் இந்த கொடூரம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல நடிகை பாவனா கடத்தி, பலாத்காரம் செய்யப்பட்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்ததன் பின்னணி தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

நடிகை பாவனா சித்திரம் பேசுதடி, கூடல் நகர், வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள நாயகியாக படங்களிலும் நடித்தவர்.

இவர், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பலால் வழி மறித்து கடத்தப்பட்டார்.

Why Dileep planned to abduct Bhavana?

காரிலேயே பலாத்காரம் செய்யப்பட்டார். அதை அப்படியே வீடியோவாகவும் பதிவு செய்தனர் கடத்தல்காரர்கள். இச் சம்பவம், திரையுலகைத் தாண்டியும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அடுத்த ஓரிரு நாளில், இந்த கொடுமையைச் செய்த பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று காலை கைது செய்யப்பட்டார். நடிகை பாவனாவை கடத்துவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் சதித்திட்டம் தீட்டியதற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எதனால் திலீப் இப்படி ஒரு காரியத்தைச் செய்தார்?

நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல்வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா போட்டுக் கொடுத்துவிட்டாராம். இதனால் பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார்.

பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2-வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டாராம். இது திலீப்பின் ஆத்திரத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. பாவனாவை ஏதாவது ஒரு வகையில் பழி வாங்க வேண்டும் எனக் காத்திருந்த திலீப், அவருக்கு திட்டமிட்டு பாலியல் தொல்லை செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்சர் சுனில் விசாரணையில் திலீப் தொடர்பு பற்றி உளறிவிட்டதால், வசமாக சிக்கிக் கொண்டார் திலீப்.

English summary
Why actor Dileep has planned to abduct Bhavana? Here are the reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil