மாறன் படம் மண்டையை காயவைக்க தனுஷ் காரணமா? இயக்குநர் கார்த்திக் நரேன் சொல்லப் போகும் உண்மை என்ன?

சென்னை: ஹாட்ரிக் ஓடிடி தோல்வியை நடிகர் தனுஷ் தவிர்ப்பாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, கார்த்திக் சுப்புராஜ், ஆனந்த் எல் ராயே எவ்வளவோ பரவாயில்லை என கும்பிடு போடும் அளவுக்கு சமூக வலைதளங்களில் இயக்குநர் கார்த்திக் நரேனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Recommended Video

Maaran Movie Review by Poster Pakiri | Dhanush | Malavika Mohanan | Karthick Naren | Filmibeat Tamil

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனா இப்படியொரு மண்டையைக் காயவைக்கும் மாறன் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் என தனுஷ் ரசிகர்களே கண்டபடி திட்டித் தீர்த்த நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன் அதிரடியாக போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நடிகர் தனுஷ் தான் இந்த படத்தின் சொதப்பலுக்கு காரணம் என சொல்ல வருகிறாரா கார்த்திக் நரேன் என்கிற கேள்வியை அவரது அந்த போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது.

தனுஷின் மாறன்

தனுஷின் மாறன்

ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே (அ) கலாட்டா கல்யாணம் என இரு படங்கள் ரசிகர்களை சோதித்தது போதாது என டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியான மாறன் அதை விட மோசமான திரைக்கதை மற்றும் இயக்கத்துடன் வெளியாகி இரவு நேரத்தில் படத்தை பார்த்த ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

எதுவுமே சரியில்லை

எதுவுமே சரியில்லை

புதிய படங்களில் திரைக்கதை சரியில்லை என்றாலும், அதன் பாடல்கள், மேக்கிங் மற்றும் முன்னணி நடிகர்களின் நடிப்பு என பல விசயங்கள் அந்த படத்தை தாங்கி பிடிக்கும். ஆனால், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, அமீர், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் எதுவுமே பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தனுஷின் இன்ட்ரோ காட்சியில் வாட்டர் பாக்கெட்டில் முகத்தை கழுவது தொடங்கி (வாட்டர் பாக்கெட் இப்போ இருக்கான்னு ரசிகர்களே கேட்கின்றனர்) கடைசியில் தங்கச்சிக்கு ஒரு நிமிடக் காட்சிக்கு கண் பார்வை பறிபோவது வரை அனைத்துமே ஒர்க்கவுட் ஆகவில்லை.

வடசென்னை நடிகர்கள்

வடசென்னை நடிகர்கள்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் நடித்த தனுஷ், சமுத்திரகனி, அமீர் எல்லாம் எப்படி இப்படியான ஒரு ஸ்க்ரிப்ட்டை ஓகே செய்து நடித்தார்கள் என்ற குழப்பத்தில் தான் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் தற்போது உள்ளனர். யாருக்கும் எந்தவொரு அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பும் இல்லாதது தான் பிரச்சனை என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

உண்மையை அப்புறம் சொல்றேன்

உண்மையை அப்புறம் சொல்றேன்

துருவங்கள் பதினாறு, மாஃபியா, நவரசாவில் இடம்பெற்ற புராஜெக்ட் அக்னி படங்களை இயக்கிய கார்த்திக் நரேனா இப்படியொரு படத்தை கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வரும் நிலையில், அப்செட்டான இயக்குநர் கார்த்திக் நரேன் "ரைட்டு.. உண்மையை அப்புறம் சொல்றேன்" என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உடனடியாக டெலிட் செய்தது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

தனுஷ் தான் காரணமா?

தனுஷ் தான் காரணமா?

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என பறந்து பறந்து நடித்து வரும் நடிகர் தனுஷ் தான் மாறன் படம் இப்படியொரு அவுட்புட்டில் வெளியாக காரணம் என பலிபோட நினைத்துள்ளாரா இயக்குநர் கார்த்திக் நரேன் என்கிற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். எந்த படத்திற்கும் ஒழுங்கான கால்ஷீட் கொடுக்காமல், அப்படி அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்திற்கு பறந்து விடுவது தான் மாறன் படம் முழுமையடையாத படமாக இருக்க காரணமா? என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

தப்பிக்க பார்க்கிறாரா

தப்பிக்க பார்க்கிறாரா

மாறன் படம் ரசிகர்களை பெரும் அதிருப்தி படுத்தியுள்ள நிலையில், தன் மீது தவறு இல்லை எனக் கூறி இயக்குநர் கார்த்திக் நரேன் தப்பிக்க பார்க்கிறாரா? முதலில் கெளதம் மேனன் உடன் பிரச்சனை, இப்போ தனுஷ் உடன் பிரச்சனையா? என்றும் மேக்கிங் மற்றும் ஸ்க்ரீன்பிளே கொஞ்சம் கூட சரியில்லையே இதற்கும் தனுஷை மட்டுமே குறைய சொல்லப் போகிறீர்களா? என இயக்குநர் கார்த்திக் நரேனை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X