அப்படித் தான் செய்வேன், எனக்கு தப்பா தெரியல: நித்யா மேனன் தில் பேட்டி
Recommended Video

சென்னை: கதை, திரைக்கதையில் தலையிடுவது தப்பு இல்லை என்கிறார் நித்யா மேனன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் நித்யா மேனன். தெலுங்கில் அவே படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார்.
நித்யா மேனனிடம் கதை சொல்லப் போனால் அவர் குறுக்கிட்டு கதையை மாற்றுவதாக இயக்குனர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து நித்யா கூறியிருப்பதாவது,

திரைக்கதை
இயக்குனர்கள் கதை சொல்ல வந்தால் நான் அதில் குறுக்கிடுவதாக கூறப்படுவது உண்மையே. என்னிடம் 200 பேர் கதை சொல்ல வந்தால் அதில் 4 அல்லது 5 கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

நடிப்பு
வித்தியாசமாக, புதிதாக இருக்கும் கதைகளாக தேர்வு செய்கிறேன். எனக்கு கதை பிடித்து நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு திரைக்கதை விஷயத்தில் தலையிட்டு நிறைய மாற்றம் செய்ய வைக்கிறேன்.

தவறு
திரைக்கதை மட்டும் அல்ல வசனத்திலும் தலையிடுகிறேன். நிறைய வசனங்கள் நான் சொல்லிக் கொடுத்தவையாகவே இருக்கும். இவ்வாறு தலையிட்டு மாற்றம் செய்வதை தவறு என்று நான் நினைக்கவில்லை.

தயாரிப்பாளர்
எதிர்காலத்தில் இயக்குனராகும் ஆசை உள்ளது. ஆனால் நிச்சயம் தயாரிப்பாளர் ஆக மாட்டேன். எனக்கு வரவு, செலவு கணக்கு எல்லாம் பார்க்க தெரியாது. ஒரே மாதிரியான படங்களில் நடிக்க விரும்பவில்லை.

கதாபாத்திரம்
மெர்சல் போன்ற படங்களில் நான் வயதுக்கு மிஞ்சிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறுகிறார்கள். கதை பிடித்துவிட்டால் எப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரமானாலும் நடிப்பேன். ஓரினச்சேர்க்கையாளராக நடித்ததில் கூட எனக்கு வருத்தமே இல்லை என்கிறார் நித்யா மேனன்.


Click it and Unblock the Notifications











