நான் ஏன் 'ஐ' இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை?: சுரேஷ் கோபி விளக்கம்
சென்னை: பிரமாண்ட விழாக்களில் தான் கலந்து கொள்வது இல்லை என்றும் அதனால் தான் ஐ பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்றும் நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த திங்கட்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் கலந்து கொண்டார்.
ஆனால் படத்தின் வில்லனான சுரேஷ் கோபி கலந்து கொள்ளவில்லை.

பிரச்சனை
ஷங்கருக்கும், சுரேஷ் கோபிக்கும் இடையே டேட்ஸ் விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் தான் அவர் விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

சுரேஷ் கோபி
ஐ பட இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தயாரிப்பாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்தேன் என்றார் சுரேஷ் கோபி.

பிரமாண்டம்
பெரும் செலவு செய்து பிரமாண்டமாக நடக்கும் விழாக்களில் பங்கேற்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் ஐ விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்.

விளம்பர நிகழ்ச்சி
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வேன் என சுரேஷ் கோபி கூறினார்.


Click it and Unblock the Notifications











