விஜய் சேதுபதியின் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டா?: உண்மை இதோ

By Siva

சென்னை: தமிழ் சினிமாவின் பிசியான நடிகரான விஜய் சேதுபதியின் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் எதற்காக வந்தார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ரொம்ப ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. மணிரத்னத்தின் இயக்கத்தில் அவர் நடிப்பில் மிரட்டிய செக்கச் சிவந்த வானம் படம் நேற்று வெளியானது.

IT officials raid Vijay Sethupathis house, office

அடுத்தாக 96 படம் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படி அடுத்தடுத்து பட ரிலீஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து விசாரித்தபோது வருமான வரித்துறையினர் சோதனை நடத்த அவர் வீட்டிற்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதி வருமான வரி தாக்கல் செய்துள்ளார். அது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் அவர் வீட்டிற்கு வந்துள்ளனர். வந்தவர்கள் சில ஆவணங்களை அவர் வீட்டில் மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

மறந்துவிட்டுச் சென்ற ஆவணங்களை எடுக்க அவர்கள் இன்று விஜய் சேதுபதியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் அவர் வீட்டில் ரெய்டு தான் நடக்கிறது என்ற தவறான தகவல் தீயாக பரவி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X