twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது ஏன் 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு முன்பு பார்த்திபன் ராஜினாமா செய்தார்?

    By Siva
    |

    Recommended Video

    துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பார்த்திபன்- வீடியோ

    சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் பதவியை பார்த்திபன் ஏன் ராஜினாமா செய்தார் என்பது தெரிய வந்துள்ளது.

    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவராக இருந்தார். இந்நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தைய நாள் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    தான் ராஜினாமா செய்தது குறித்து பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார் பார்த்திபன்

    பார்த்திபன்

    பார்த்திபன்

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சனையாக உள்ளதாம். பார்த்திபனுக்கும் சில உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பிரச்சனை

    பிரச்சனை

    பார்த்திபன் எப்பொழுதுமே மாத்தி யோசிப்பவர். தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இளையராஜா 75 நிகழ்ச்சியை சுவாரஸ்யமானதாக ஆக்க பல புது ஐடியாக்களை பார்த்திபன் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரின் ஐடியாக்களை யாருமே கண்டுகொள்ளவில்லையாம்.

    விலகல்

    விலகல்

    தான் கொடுத்த பல ஐடியாக்களை யாரும் கேட்காதது பார்த்திபனுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. இதையடுத்து மதிப்பு இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம். இளையராஜா 75 நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொள்ள முக்கிய காரணம் பார்த்திபன் என்று கூறப்படுகிறது.

    விளக்கம்

    தயாரிப்பாளர்கள் சங்க பதவியை ராஜினாமா செய்த பிறகு பார்த்திபன் போட்ட ட்வீட்டை பார்த்தே நடந்தது என்னவென்பது பலருக்கும் புரிந்துவிட்டது.

    துவங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு

    English summary
    According to sources, Parthiban has resigned his post from TFPC after having difference of opinion with the members in connection with Ilayaraja 75.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X