ரஜினி, கமல், தல, தளபதியை வச்சு செஞ்சும் 'தமிழ் படம் 2' ஏன் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது?

By Siva

Recommended Video

ரஜினி, கமல், தல, தளபதியை வச்சு செஞ்சும் 'தமிழ் படம் 2' ஏன் பிடித்துள்ளது?

சென்னை: அனைவரையும் பாரபட்சமில்லாமல் மரண கலாய் கலாய்த்தும் தமிழ் படம் 2 ஏன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது தெரியுமா?

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தமிழ் படம் 2. ஏதோ பெரிய இவங்களாட்டம் ரஜினி, கமல் பட ரேஞ்சுக்கு விளம்பரம் செய்கிறார்கள் என்று விமர்சனம் கிளம்பியது.

அந்த விமர்சனங்களையும் கூட தமிழ் படம் 2 வரவேற்று ஏற்றுக் கொண்டது.

வியப்பு

வியப்பு

சிவா படத்துக்கு எல்லாம் காலையில் 5 மணி காட்சி வைப்பது ஓவர். எவன் வரப் போறான் என்று எகத்தாளமாக பேசியவர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டது படக்குழு. அதிகாலையிலேயே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

ஹிட்

ஹிட்

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ஏகப்பட்ட படங்களை தமிழ் படம் 2-ல் வச்சு செஞ்சிருக்காங்க. அப்படி இருந்தும் படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். படம் மாஸ், வேற லெவல், சர வெடி, சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது என்கிறார்கள்.

காமெடி

காமெடி

காமெடி பண்ணுகிறேன் என்ற பெயரில் அனைவரையும் உங்க வீட்டு கலாய் எங்க வீட்டு கலாய் இல்லை மரண கலாய் கலாய்த்திருந்தாலும் யார் மனதும் புண்படாத படி கிண்டல் செய்துள்ளனர். இது இது தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிரிப்பு

சிரிப்பு

மற்றவர்களை விடுங்க சம்பந்தப்பட்டவர்களே படத்தை பார்த்தாலும் அவர்களால் சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவுக்கு நாகரீகமாக படத்தை எடுத்துள்ளார் சி.எஸ். அமுதன். உங்கள் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும் அமுதன்.

தல

தல

தமிழ் படம் 2 போஸ்டர்களை பார்த்த தல, தளபதி ரசிகர்கள் யோவ் அமுதா உனக்கு வேறு வேலையே இல்லையா என்று கொந்தளித்தார்கள். ஆனால் படத்தை பார்த்த அவர்கள் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை என்று பாராட்டியுள்ளார்கள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்காமல் மனம் விட்டு சிரித்து மகிழ வைத்துள்ளது தமிழ் படம் 2. நமக்கு பார்க்க பல்வேறு படங்களின் கலாய் கோர்வை தமிழ் படம் 2. ஆனால் அதை ஒரு கதையாக திரையில் காட்டுவது எளிதான விஷயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X