விஷால், அனிஷா திருமணம் நின்று போனது ஏன்?

By Siva

சென்னை: விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதை அவர்களின் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.

விஷாலும், வாரிசு நடிகையும் காதலிப்பதாக பல காலம் பேசப்பட்ட நிலையில் அவருக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இது பெற்றோர்கள் பார்த்து வைத்த பெண் என்று பலரும் நினைத்தபோது காதல் திருமணம் என்றார் விஷால். அனிஷாவை பார்த்த உடனேயே காதல் ஏற்பட்டுவிட்டதாக கூறி அனைவரையும் வியக்க வைத்தார் விஷால்.

திருமணம்

திருமணம்

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வந்தார் விஷால். கட்டிடப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் அக்டோபர் மாதம் விஷால், அனிஷா திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது.

அனிஷா

அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷால் மற்றும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். அதை பார்த்த பிறகு தான் அவருக்கும், விஷாலுக்கும் இடையே பிரச்சனையோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து திருமணம் நின்றுவிட்டதாக பேச்சு கிளம்பியது. அனிஷா புகைப்படங்களை நீக்கிவிட்டாலும் விஷால் அப்படி செய்யவில்லை.

விஷால்

விஷால்

திருமணம் நின்றுவிட்டது உண்மை தான் என்று விஷாலின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது. இருப்பினும் திருமணம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். விஷால், அனிஷா இது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இருவரும் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

விஷாலுக்கும், அனிஷாவுக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாம். இதையடுத்து தான் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதலில் விழுந்த வேகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அது இப்படி முடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. விஷால் திருமணம் நின்றுவிட்ட தகவல் அறிந்து அவரின் ரசிகர்கள் தான் பாவம் வருத்தத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X