இமேஜ் பற்றி கவலைப்படாமல் அஜித் ஏன் தல 59 படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

By Siva

சென்னை: பிங்க் பட ரீமேக்கில் எதற்காக அஜித் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மாஸ் ஹீரோவான அஜித் எதற்காக பிங்க் போன்ற சீரியஸான படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.

அந்த கேள்விக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.

ஹீரோ

ஹீரோ

பிங்க் படத்தில் அஜித்தை மாஸ் ஹீரோவாக எல்லாம் காட்ட முடியாது. கதை அந்த அளவுக்கு சீரியஸானது. 3 பெண்களை சுற்றி நகரும் கதையில் அஜித் நடிப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

சமுதாயத்திற்கு தேவையான கதையை படமாக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினாராம். அந்த படத்தை தமிழில் அதுவும் அஜித்தை வைத்து எடுக்க அவர் ஆசைப்பட்டிருக்கிறார். அதன் பிறகே அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஐடியா கொடுக்க அது அவருக்கு பிடித்துவிட்டதாம்.

இங்கிலிஷ் விங்கிலிஷ்

இங்கிலிஷ் விங்கிலிஷ்

இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தபோது அஜித்துக்கும் போனி கபூருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அஜித் ஸ்ரீதேவி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருப்பதை பார்த்து அவர் அசந்து போய்விட்டார்.

ஆசை

ஆசை

ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அஜித் தனது இமேஜை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிங்க் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கிவிட்டதாம். அஜித் அடுத்த மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X