»   »  அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?

அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் நின்று போனதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்தத்தையே பிரமாண்டமாக நடத்தி அசத்திவிட்டனர்.

திருமணம்

திருமணம்

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது. இத்தாலி பயணத்தை ரத்து செய்யுமாறு நாகர்ஜுனா உறவினர், நண்பர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

அகில், ஸ்ரேயா பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் மனஸ்தாபத்தில் இருந்துள்ளனர்.

குடும்பத்தார்

குடும்பத்தார்

திருமண ஏற்பாடுகள் செய்வதில் நாகர்ஜுனா, ஸ்ரேயா குடும்பத்தார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இதனால் ஏற்கனவே அகில், ஸ்ரேயா இடையே இருந்த பிரச்சனை பெரிதாகி பிரிந்துவிட்டார்களாம்.

காதல் முறிவு

காதல் முறிவு

அகில், ஸ்ரேயா காதலை முறித்துக் கொள்ள திருமணம் நின்றுவிட்டது. இந்த திருமணம் நின்றுள்ளது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Actor Nagarjuna's son Akhil, Shreya 's wedding has been called off as the two families had issues in doing wedding preparations.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil