»   »  பைரவா டீஸர் ஏன் முன்கூட்டியே வெளியிடப்பட்டது?

பைரவா டீஸர் ஏன் முன்கூட்டியே வெளியிடப்பட்டது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தின் டீஸர் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே வெளியிடப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் பைரவா படத்தின் டீஸர் 28ம் தேதி இரவு 12.01 மணிக்கு தீபாவளி பரிசாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


Why does Bairavaa teaser get released early?

விஜய் ரசிகர்களும் 12.01 மணியை எதிர்பார்த்து தூங்காமல் காத்திருந்தனர். ஆனால் இரவு 9.30 மணிக்கே டீஸரை வெளியிட்டுவிட்டார்கள். பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி வெளியிடும் முன்பே நெட்டில் கசிந்ததோ அதே போன்று டீஸரும் கசிந்துவிட்டதாம்.


அதை சமாளிக்கவே முன்கூட்டியே டீஸரை வெளியிட்டுவிட்டார்களாம். இப்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் என அடுத்தடுத்து நெட்டில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


எவன் பார்க்குற வேலை என்றே தெரியவில்லையே என படக்குழுவினர் குழம்பிப் போயுள்ளனர்.

English summary
Bairavaa teaser got released hours ahead of the official release time for a reason.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos