த்ருவுக்கு ஜோடியாக மேகாவை பாலா ஏன் தேர்வு செய்தார் தெரியுமா?
Recommended Video

சென்னை: வர்மா படத்தில் த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலா ஏன் மேகாவை தேர்வு செய்தார் என்பது தெரிய வந்துள்ளது.
சூப்பர் ஹிட் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பாலா இயக்கி வரும் இந்த படம் மூலம் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
சென்டிமென்டாக பாலாவை இயக்க வைத்துள்ளார் விக்ரம்.

த்ருவ்
த்ருவுக்கு ஏற்ற ஜோடியை தேடிக் கொண்டிருந்தார் பாலா. கவுதமியின் மகள் சுப்புலட்சுமி, ஸ்ரேயா சர்மா ஆகியோரில் ஒருவர் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்படக்கூடும் என்று கூறப்பட்டது.

மேகா
மேற்கு வங்கத்தை சேர்ந்த மேகாவை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளார் பாலா. மேகாவின் கண்கள் பிடித்துப் போன ஒரே காரணத்திற்காக பாலா அவரை தேர்வு செய்துள்ளாராம்.

கதை
மேகாவின் கண்கள் கதை பேசுகிறதாம். மேலும் அவர் கதக் கலைஞராம். அதனாலேயே அவரை தன் பட ஹீரோயின் ஆக்கியுள்ளாராம் பாலா. மாடல் அழகியான மேகா அமர் பிரேம் என்ற பெங்காளி படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பாலா
மேகாவை வைத்து பாலா ஷூட்டிங்கை துவங்கிவிட்டாராம். ஆனால் த்ருவ், மேகா சேர்ந்து வரும் காட்சிகள் இனி தான் படமாக்கப்பட உள்ளதாம். வர்மா படம் மூலம் மேகா கோலிவுட் வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











