'ஜில்லா' தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் அலுவலகத்தில் 2 மாதத்திற்குள் 2 முறை ரெய்டு ஏன்?
சென்னை: ஜில்லா பட தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் 2 மாதத்திற்குள் 2 முறை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடித்தியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி ஆரம்பம் படம் ரிலீஸான அன்று அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதே நாளில் மேலும் சில பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

ஆர்.பி.சௌத்ரி
அக்டோபர் மாதம் 31ம் தேதி ஏ.எம். ரத்னத்தின் வீடு, அலுவலகம் தவிர விஜய்யின் ஜில்லா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

ஏ.எம். ரத்னம்
ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் நடந்த சோதனையின்போது அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, கடன் தான் இருக்கிறது என்று கடன் பத்திரங்களை காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரெய்டு
ஆர்.பி. சௌத்ரியின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். இது தவிர அவரது மகன்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

முக்கிய ஆவணங்கள்
சௌத்ரியின் அலுவலகத்தில் அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாம். அதில் உள்ள விவரங்களின் அடிப்படையிலும், அவர் வரியை சரியாக கட்டவில்லை என்ற தகவலின்பேரிலும் தான் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை
ஆர்.பி. சௌத்ரி வரி ஏய்ப்பு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சூப்பர் குட் பிலிம்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறையின் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











