இதற்காகத் தான் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கிறாரோ?

By Siva

Recommended Video

விக்னேஷ் சிவனுடன் ஓய்வு எடுக்க வெளிநாட்டிற்கு சென்ற நயன்

சென்னை: நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க இது தான் காரணமாக இருக்குமோ?

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார்.

தற்போது கூட அவர்கள் இருவரும் கிரேக்க தீவுக்கு சென்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

நயன்தாரா

நயன்தாரா

விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் இவருக்கு வந்த வாழ்வை பாரேன், இவருக்கு எப்படி லேடி சூப்பர் ஸ்டார் செட்டானார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை அகத்திலும் உள்ளது என்பதை நயன்தாரா நன்கு புரிந்து கொண்டிருக்கிறார் என்பது அவர் விக்னேஷ் சிவனை தேர்வு செய்ததில் இருந்தே தெரிகிறது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

விக்னேஷ் சிவன் இதுவரை போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய மூன்று படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க உள்ளார்.

இயக்குநர்கள்

இயக்குநர்கள்

வெறும் 3 படமே இயக்கியிருந்தாலும் பிற இயக்குநர்களையும், அவர்களின் படைப்புகளையும் மனதார பாராட்ட தவறுவது இல்லை விக்னேஷ் சிவன். மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் தேடிக் கொடுக்கிறார். சக இயக்குநர்களை பாராட்டுவதில் கஞ்சத்தனமே காட்டாதவர் விக்னேஷ் சிவன். இப்படி அடுத்தவர்களின் வெற்றியை பார்த்து பாராட்ட, மகிழ்ச்சி அடைய அனைவராலும் முடியாது.

காதல்

காதல்

விக்னேஷ் சிவனின் இந்த நல்ல மனதை பார்த்து தான் நயன்தாரா அவர் மீது ஆசைப்பட்டிருப்பார். அழகு இன்று இருக்கும், நாளை இருக்காது. ஆனால் நல்ல மனமும், குணமும் என்றுமே நிலைத்து நிற்கும். வாழ்க்கைத் துணையாக ஒரு நல்லவர் தான் வேண்டும் என விரும்பி விக்னேஷ் சிவனை தேர்வு செய்திருக்கிறார் நயன்தாரா.

அன்பு

அன்பு

விக்னேஷ் சிவன் நயன்தாராவை அதிகாரம் செய்வது இல்லை. மாறாக தங்கம், வைரம் என்று தலையில் வைத்து கொண்டாடுகிறார். எந்த பெண்ணுக்குமே இது போன்ற ஆணை தான் பிடிக்கும். அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X