இந்த 2 காரணத்தால் தான் நஸ்ரியா தல 59 படத்தில் நடிக்கலையா?
சென்னை: நஸ்ரியா தல 59 படத்தில் நடிக்காததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தில் நஸ்ரியா நஸீம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.
இந்நிலையில் நஸ்ரியா நடிக்காமல் போனதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நஸ்ரியா
தல 59 படத்தில் நஸ்ரியா நடிக்காததற்கு இரண்டு காரணங்கள் உள்ளதாம். படத்தில் நஸ்ரியா நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததாம். அது அவருக்கு ஒத்து வரவில்லையாம். மேலும் படத்திற்கு அவருக்கு அளிக்கப்படுவதாக கூறிய சம்பளத் தொகை குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கல்யாணி
நஸ்ரியாவும், கல்யாணி ப்ரியதர்ஷனும் தல 59 படத்தில் நடிப்பார்கள் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தல 59 படத்தில் நடிப்பவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை.
டாப்ஸி
பிங்க் படம் டாப்ஸிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. தன்னை போன்றே ஷ்ரத்தாவின் கெரியரிலும் இந்த படம் முக்கியமானதாக அமையட்டும் என்று டாப்ஸி வாழ்த்தியுள்ளார்.

வித்யா பாலன்
நடிக்கத் தெரியவில்லை என்று கோலிவுட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட வித்யா பாலன் பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். அவர் தற்போது தல 59 படம் மூலம் கோலிவுட் வருகிறார்.


Click it and Unblock the Notifications











