இந்த 2 காரணத்திற்காக தான் என்.ஜி.கே. படத்தில் நடித்தேன்: ரகுல் ப்ரீத் சிங்

By Siva

Recommended Video

NGK Movie Review | NGK படம் எப்படி இருக்கு மக்கள் கருத்து- வீடியோ

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்தது ஏன் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் ஃபிலிமிபீட்டிற்கு பேட்டி அளித்துள்ளார்.

Why does Rakul Preet Singh act in NGK?

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

என்.ஜி.கே. பற்றிய அனைத்தும் பிடித்திருந்தது. செல்வராகவன் இயக்கத்தில் நடித்தால் நம் நடிப்புத் திறமை மேம்படும் என்று கேள்விப்பட்டேன். மேலும் இது சூர்யா சார் படம். என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருந்தது. செல்வராகவன் இயக்கிய படங்களில் கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

செல்வராகவன் படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கார்த்தியும், சூர்யாவும் வித்தியாசமானவர்கள். இரண்டு பேருமே கடின உழைப்பாளிகள், தலைக்கனம் இல்லாதவர்கள். செய்யும் வேலையை இஷ்டப்பட்டு செய்பவர்கள்.

எனக்கு தமிழை விட தெலுங்கு மொழி நன்றாகத் தெரியும். நான் தெலுங்கில் சரளமாக பேசுவேன். இந்நிலையில் தமிழ் வசனத்தை மனப்பாடம் செய்து பேசுவது லைட்டா கஷ்டமாக இருந்தது. அதே சமயம் அந்த சவாலை நான் விரும்பி ஏற்று நடித்தேன்.

நான் பாக்கெட் மணிக்காக தான் முதலில் நடிக்கத் துவங்கினேன். கேமராவுக்கு முன் நின்று நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்தே நடிகையாவது என்று முடிவு செய்தேன் என்றார்.

தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் சேர்ந்து மன்மதுடு 2 படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். அந்த படத்தை பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுடன் நடித்த போதிலும் மீண்டும் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அவரின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

என்.ஜி.கே. படத்திற்கு தமிழகத்தில் அமோக ஆதரவு கிடைத்தாலும் பிற மாநிலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் என்.ஜி.கே. படத்தை பார்த்தவர்கள் கேட்கும் ஒரே கேள்வி கதை என்னப்பா என்பது தான். கதையே புரியவில்லை என்கிறார்கள் அவர்கள். தமிழக ரசிகர்களோ சூர்யாவுக்கும், ரகுலுக்கும் இடையே சம்பவம் நடந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X