ரூ. 2 கோடி விளம்பர படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?: சாய் பல்லவி விளக்கம்
Recommended Video
சென்னை: ரூ. 2 கோடி விளம்பரத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
சிவப்பழகு கிரீம் விளம்பரம் ஒன்றில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார் சாய் பல்லவி. அந்த விளம்பரத்தில் நடிக்க ரூ. 2 கோடி சம்பளம் தருகிறோம் என்று கூறியும் சாய் பல்லவி ஒப்புக்கொள்ளவில்லை.
அந்த விளம்பர படத்தில் அவர் ஏன் நடிக்க மறுத்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சிவப்பு
சாய் பல்லவிக்கு தனது தங்கச்சி பூஜா என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு பெற்றோர்கள், தங்கை தான் உலகம். பூஜாவுக்கு தான் அக்கா சாய் பல்லவி போன்று சிவப்பாக இல்லையே என்ற வருத்தம் சிறு வயது முதல் உள்ளது.

சாய் பல்லவி
கண்ணாடி முன்பு நின்று தன் நிறத்தையும், அக்காவின் நிறத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து வருத்தப்படுவாராம் பூஜா. பர்கர், பீட்சா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு காய்கறிகள், பழங்கள் சாப்பிடு கலர் கூடும் என்று சாய் பல்லவி பூஜாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தங்கை
அக்கா போன்று சிவப்பாக ஆக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு பிடிக்காவிட்டாலும் பழங்கள், காய்கறிகள் சாப்பிடத் துவங்கியுள்ளார் பூஜா. கலர் கூட வேண்டும் என்று பூஜா வருத்தப்படுவதை பார்த்து சாய் பல்லவி கவலைப்பட்டுள்ளார்.

விளம்பரம்
இந்தியர்களின் நிறம் இது தான். அப்படி இருக்கும் போது வெளிநாட்டவர்களை போன்று வெள்ளையாக நினைப்பது சரியில்லை. கலருக்காக என் தங்கை மெனக்கெடுவதை பார்த்து கவலையாக இருந்தது. அதனால் நான் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











