twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயனுக்கு என்ன பிரச்சனை, ஏன் இப்படி குண்டா, தாடியும் மீசையுமா இருக்கார்?

    By Siva
    |

    Recommended Video

    சிவகார்த்திகேயனுக்கு ஏன் இப்படி குண்டா, தாடியும் மீசையுமா இருக்கார்? - வீடியோ

    சென்னை: சிவகார்த்திகேயன் ஏன் வெயிட் போட்டு தாடி, மீசையுமாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

    காளி ரங்கசாமி இயக்கத்தில் தினேஷ் மாஸ்டர் ஹீரோவாகியுள்ள படம் ஒரு குப்பை கதை. உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது,

    சிவகார்த்திகேயன்

    சிவகார்த்திகேயன்

    சீமராஜா ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான கெட்டப்பில் தான் உள்ளேன். என்ன கதாபாத்திரம் என்று கேட்காதீர்கள். இயக்குனர் இங்கு தான் இருக்கிறார். சொல்லவிட மாட்டார்.

    டான்ஸ்

    டான்ஸ்

    தினேஷ் மாஸ்டர் அழைத்ததும் நான் வருகிறேன் என்று கூறியது என் கடமை என்று கூட கூறலாம். நான் ஆரம்பத்தில் படம் பண்ணியபோது சின்ன ஹீரோ தானே என்று நினைக்காமல் பெரிய மாஸ்டரான அவர் வந்து கோரியோகிராப் செய்து கொடுத்தார். இந்த மாதிரி நேரத்தில் தான் அதை திருப்பி செய்ய முடியும்.

    சிபிஐ எங்கே

    சிபிஐ எங்கே

    ராஜூ மாஸ்டர் அணியில் அனைவரும் சூப்பராக ஆடுவார்கள். சிபிஐ எங்கே என்ற பாடலில் மாஸ்டரின் எக்ஸ்பிரஷன் ரொம்ப க்யூட்டாக இருக்கும். ரொம்ப ரசித்து பார்த்துள்ளேன். நான் விஜய் அவார்ட்ஸ் பண்ணும்போது சும்மா ஜாலியாக ஒன்று சொன்னேன். உடல் வியர்க்காமல் இருக்க, உடல் வலிக்காமல் இருக்க அணுகவும் தினேஷ் மாஸ்டர் என்று சொன்னேன்.

    பாடல்

    பாடல்

    அதன் பிறகு எதிர்நீச்சல் படத்தில் பூமி என்னை சுத்துதே பாட்டுக்கு ஆடியபோது டான்ஸர்கள் எல்லாம் என்னிடம் கேட்டார்கள் அண்ணா வியர்க்குதா, நல்லா வியர்க்குதா என்றனர். ஈஸியாகத் தான் இருக்கு ஆனால் வியர்க்குதுப்பா என்றேன்.

    டிரெண்ட்

    டிரெண்ட்

    தெலுங்கு திரையுலகில் அவருடைய ஸ்லோ மூவ்மென்ட் பெரிய டிரெண்டானது. இங்கும் டிரெண்ட் ஆனது. நாம் புதுசா ஏதாவது செய்தால் உனக்கு எதுக்குப்பா இந்த வேலை இப்படியே இருக்க வேண்டியது தானே என்று எளிதாக கேட்டுவிடுவார்கள்.

    நடிப்பு

    நடிப்பு

    நான் நடிக்க ஆரம்பிக்கும்போதும் அப்படித் தான் கேட்டார்கள். எதுக்குப்பா உனக்கு, விஜய் டிவி நல்லா போயிட்டு இருக்கு, பார்த்து இருந்துக்க, ஹீரோ எல்லாம் ரொம்ப கஷ்டம் என்றார்கள். நான் ஹீரோலாம் கிடையாதுங்க. அஜித் சார், ரஜினி சார், விஜய் சார் அவங்க எல்லாம் இருக்காங்க அவங்க எல்லாம் தான் ஹீரோ. நான் ஒரு லீட் ஆக்டர் என்று சொல்லிவிட்டு வந்தேன். நீங்க டான்ஸ் மாஸ்டராகவும் பயணம் செய்ய வேண்டும், ஹீரோவாகவும் இருக்க வேண்டும். திறமைசாலிகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார் சிவகார்த்திகேயன்.

    English summary
    Sivakarthikeyan has revealed that reason for his weight gain and beard look at the audio launch of Oru Kuppai Kathai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X