தல பட நடிகை இன்னும் திருமணம் செய்யாதது ஏன்?: பிரபல நடிகர் கலகல

By Siva

Recommended Video

பாலிவுட் நடிகை தபு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை கலாய்த்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன்- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை தபு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை கலாய்த்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தபு, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் தே தே பியார் தே என்னும் படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பர நிகழ்ச்சியின்போது அஜய் தனது நெருங்கிய தோழியான தபுவை கிண்டல் செய்துள்ளார்.

தபு

தபு

நான் இளம் பெண்ணாக இருந்தபோது எந்த பையன் வந்து என்னுடன் பேசினாலும் என் நண்பன் அஜய் விரட்டிவிடுவார். அப்படி விரட்டி, விரட்டியே எனக்கு யாரும் கிடைக்கவில்லை. நானும் திருமணம் செய்யவில்லை. எனக்கு ஏற்ற நபரை இன்னும் சந்திக்கவில்லை என்று தபு முன்பு தெரிவித்தார்.

அஜய்

அஜய்

தே தே பியார் தே விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜய் தேவ்கனிடம் தபு இன்னும் சிங்கிளாக இருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, தபுவுக்கு என்னை மாதிரி ஆள் வேண்டுமாம், அது கண்டிப்பாக கிடைக்காது என்று காமெடியாக பதில் அளித்தார்.

மும்பை

மும்பை

தபு பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாக முன்பு கூறப்பட்டது. ஆனால் அந்த காதல் கைகூடவில்லையாம். அவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்யப் போவதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தபு தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று வருத்தப்படவில்லை. சிங்கிளாக, மகிழ்ச்சியாக உள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால் பிசியாக உள்ளார். கடந்த ஆண்டு வெளியான அந்தாதுன் படத்தில் நடிப்பால் மிரட்டியிருந்தார் தபு என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X