twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னவனே கேள்! எனது வேலை; எனது சுதந்திரம்”- பொட்டில் அடித்தாற் போலச் சொல்லும் குறும்படம்!

    |

    சென்னை: பெண்கள்... கண்களுக்கு மை தீட்டுவதும், அலங்காரம் செய்து கொள்வதும் மட்டுமே எங்கள் வேலையல்ல... பாத்திரங்கள் தேய்ப்பதும், வீடு துடைப்பதும் மட்டும் எங்கள் வேலையல்ல...

    எங்களுக்கான சுயகவுரவத்தினை மீட்டுக் கொடுக்கும் வேலைதான் எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி என்பதை எடுத்துரைக்கும் வகையில் வெளிவந்துள்ளது குறும்படம் ஒன்று.

    பாடகியான ஸ்மிதாவின் அழகான நடிப்பில் வெளிவந்துள்ளது இக்குறும்படம் "டையிங் டு பி மீ". ஒட்டுமொத்த பெண்களின் மன பிரதிபலிப்பினை எடுத்துக் காட்டுகின்றது இக்குறும்படம்.

    உன் உலகம் இதுதான்:

    உன் உலகம் இதுதான்:

    ஒரு அழகான கணவன் - மனைவி.... கேன்டில் லைட் டின்னர்.. சந்தோஷம் பொங்கும் முகத்துடன் மனைவி... தனக்கு வேலை கிடைத்து விட்டது என்று கணவரிடம் கூறுகிறார் அந்த மனைவி.

    இதுதான் உன் வேலை:

    இதுதான் உன் வேலை:

    ஆனால், அந்தக் கணவரோ குட்,.. ஆனால் உனக்கு எதுக்கு வேலை... அம்மா, அப்பாவை பார்த்துக் கொள்... குழந்தைகளைப் பார்த்துக்கோ... இவைதான் ஒரு பெண்ணிற்கான உண்மையான வேலைகள் என்கின்றார்.

    இயந்திரமா என் வாழ்க்கை:

    இயந்திரமா என் வாழ்க்கை:

    அந்நேரத்தில் அப்பெண்ணின் மனக் கண்களில் விரிகின்றது அவருடைய எதிர்காலம்... கருகிப் போகும் ஆசைகளில் இருவரின் சாப்பாட்டு தட்டுகளைக் கழுவி வைப்பவளாக, இயந்திரமாக சுற்றிச் சுழல்பவளாக, சீரியல் பைத்தியம் பிடித்து இடிந்து போகும் சராசரி மனுஷியாய் விரிகின்றது அவர் உலகம்.

    நரைகூடி கிழமாகிப் போய்:

    நரைகூடி கிழமாகிப் போய்:

    கரைந்து போகும் மெழுகுவர்த்தியாய் நரை கூடி கிழப்பருவம் எய்திய பெண்ணாய் நான்கு சுவருக்குள்ளேயே பெண் வெறும் பெண்ணாகவே முடிந்து போன வாழ்க்கையை கண் முன் காட்டுகின்றது அந்த மனத்திரை.

    வேலை என் சுய அடையாளம்:

    வேலை என் சுய அடையாளம்:

    சடக்கென்று மீண்டு வரும் அவர் கணவனிடம் நான் வேலைக்குச் செல்லத்தான் போகின்றேன் என்கின்றார். விழிக்கும் கணவரிடம், "இது உனக்காக இல்லை. என்னுடைய சுதந்திரம், மரியாதைக்காக..." என்றபடி தன்னுடைய தட்டை மட்டும் எடுத்துச் செல்கின்றார். கணவரும் நடப்பை, மனைவியின் மன இருப்பை உணர்ந்து அவருடைய உணவு தட்டை எடுத்துக் கொண்டு பின்னால் செல்கிறார்.

    வாழ விடுங்கள் பிளீஸ்:

    வாழ விடுங்கள் பிளீஸ்:

    இந்தியாவில் 50% பேர் பெண்கள்...கிட்டதட்ட 70% வேலை நேரத்தினை மற்றவர்களுக்காக உழைத்து செலவிடுகின்றார்கள்...இந்தியாவின் சம்பளத்தில் 10% மட்டுமே பெண்கள் ஈட்டுகின்றார்கள்...1% மட்டுமே இந்தியாவின் செல்வச் செழிப்பினை அனுபவிக்கின்றார்கள்... தன் சொந்தக் காலில் நிற்க பெண்ணின் பொருளாதார கனவுகளுக்கு வழிவிடுங்கள்... சுதந்திரமாக வாழுங்கள்...சுதந்திரமாக வாழ விடுங்கள்...என்ற புள்ளிவிவர வலி நிறைந்த வார்த்தைகளுடன் முடிவடைகின்றது...

    புரிந்து கொள்வார்கள் கண்டிப்பாக:

    ஆண்களும் மனிதர்கள்தான்...கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள் அப்பாவாக, அண்ணனாக, கணவனாக, மனிதனாக பெண்ணின் சுதந்திரத்தினை...நம்புவோம்!

    English summary
    The statistics invoked in a new short film titled 'Dying To Be Me' are a brutal reminder that it is the economic shackles of being a woman in India that prove the most binding. According to this video, Indian women make up half the country's population, contribute to 70% of its working house and yet just earn 10% of India's salary and a miserable 1% of its wealth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X