அண்ணாத்த டிரைலர் எல்லோருக்கும் ஏன் பிடிச்சிருக்கு...ஒரு சுவாரஸ்ய அலசல்

சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் நவம்பர் 4 ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் டிரைலரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை வெளியிட்டது.

Recommended Video

பேரனுடன் ANNATHE படம் பார்த்த Superstar Rajinikanth | Soundarya Rajinikanth

இந்த டிரைலர் பெரும் வரவேற்பை பெற்று, அனைவரிடமும் பாராட்டை பெற்றது. இந்த 2.41 நிமிட வீடியோ யூட்யூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் டாப் இடத்தை பெற்றுள்ளது. இந்த டிரைலரை பார்த்து விட்டு தனது பேரன் 4 நிமிடங்கள் தன்னை கட்டிப்பிடித்து பாராட்டியதாக ரஜினியே கூறி இருந்தார். அந்த அளவிற்கு ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவதற்கும், அனைவரின் மனதையும் கவர்ந்தது என்ன காரணம் என இங்கே பார்க்கலாம்.

ரஜினியின் கிராமத்து லுக்

ரஜினியின் கிராமத்து லுக்

அண்ணாத்த டிரைலரில் ரஜினி, இளமையான கிராமத்து கெட்அப்பில் தோன்றி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு ரஜினியின் கிராமத்து ஸ்டைலை பார்க்க வைத்துள்ளார் டைரக்டர். ரஜினியின் காளையன் கேரக்டர் காமெடி, ஆக்ஷன் கலந்ததாக உள்ளது. பஞ்ச் டயலாக் மட்டுமல்ல காமெடி டயலாக்குகளும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அண்ணன் – தங்கை பாசம்

அண்ணன் – தங்கை பாசம்

பாசமுள்ள அண்ணணாக தோன்றி உள்ள ரஜினி அனைவரையும் கவர்ந்துள்ளார். அவரின் தங்கையாக கீர்த்தி சுரேஷ், அண்ணன் - தங்கை இடையேயான பாச பிணைப்பை மிக அழகாக காட்டி நடித்துள்ளார். தங்களின் அண்ணன் - தங்கை பாசத்தை மிக சிறப்பாக டிரைலரிலேயே காட்டி உள்ளனர்.

மூன்று காமெடியன்கள்

மூன்று காமெடியன்கள்

அண்ணாத்த படத்தில் சூரி, சதீஷ், சத்தியன் என மூன்று காமெடியன்கள் உள்ளனர். இவர்கள் ரஜினியுடன் எப்போதும் இருப்பதாக டிரைலர் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தில் இடைவிடாத சிரிப்பு உள்ளது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூன்று பேருமே ரஜினியுடன் இணைந்து நடிப்பது இது தான் முதல் முறை.

குஷ்பு, மீனாவின் கேரக்டர்

குஷ்பு, மீனாவின் கேரக்டர்

குஷ்புவும், மீனாவும் ரஜினியின் தங்கை ரோலில் நடிப்பதாக தகவல்கள் கூறின. ஆனால் இந்த டிரைலரில் ஒருவர் மாமா என்றும், மற்றொருவர் அத்தான் எனவும் கூப்பிடுகிறார்கள். இவர்கள் யாரை கூப்பிடுகிறார்கள். என்ன கேரக்டரில் நடித்துள்ளார்கள் என்பது தொடர்ந்து சஸ்பென்சாகவே வைக்கப்பட்டுள்ளது. ரஜினி, குஷ்பு, மீனாவின் இந்த கூட்டணி படத்தில் ரசிக்கும் படியாக இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

மூன்று வில்லன்கள்

மூன்று வில்லன்கள்

அண்ணாத்த படத்தில் பல வில்லன்கள் இருப்பதாக டிரைலரில் காட்டப்படுவதால் ஆக்ஷன் காட்சிகளும் சற்று தூக்கலாகவே இருக்கும் என எதிர்பார்க்க முடிகிறது. பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யு சிங் ஆகியோர் ரஜினியுடன் மோதுகிறார்கள். ஒரே படத்தில் மூன்று வில்லன்களை சூப்பர் ஸ்டார் எப்படி சமாளிக்கிறார் என பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கில்லி ஸ்டைல் பிரகாஷ்ராஜ்

கில்லி ஸ்டைல் பிரகாஷ்ராஜ்

டிரைலரில் மூன்று வில்லன்களும் காட்டப்படுகிறார்கள். கில்லி ஸ்டைலில் காமெடி கலந்த வில்லனாக பிரகாஷ்ராஜ், முத்து படத்தில் சாமியார் கேட்அப்பில் வரும் ரஜினியின் ஜெராக்ஸ் காப்பி போல ஜெகபதி பாபு இருந்தாலும் அவரின் டைலாக்குகள் மிரட்டலாக உள்ளன. அதே போல் அபிமன்யு சிங், தனது வழக்கமான கொடூர வில்லன் லுக்கில் பட்டையை கிளப்புகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X