நீங்களாம் உண்மையிலேயே விஜய் ரசிகர்கள் தானா..? இப்டி அவரை வரிசையா பிரச்சினைல கோர்த்து விடுறீங்களே!

ஆர்வமிகுதியால் சில ரசிகர்கள் செய்யும் காரியம், நடிகர் விஜய்க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை: விஜய்க்கு சில ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறோம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அவரை பிரச்சினைக்கு மேல் பிரச்சினையில் சிக்க வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக, தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர் விஜய். தந்தை மிகப்பெரிய இயக்குநராக இருந்தபோதும், வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமான போதும், அவை எதுவும் விஜய்க்கு கை கொடுக்கவில்லை.

தன் சொந்த முயற்சியால், திறமையால் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் விஜய். விரைவில் அவர் அரசியலிலும் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பிறந்தநாள்

விஜய் பிறந்தநாள்

இந்நிலையில், நாளை மறுதினம் விஜய் பிறந்தநாள் வருகிறது. அதையொட்டி தளபதி 63 பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. விஜய் பிறந்தநாளைக் கொண்டாட அவரது ரசிகர்களும் இப்போதிருந்தே தயாராகி விட்டனர்.

சமூக வலைதளங்களில் வாக்குவாதம்

சமூக வலைதளங்களில் வாக்குவாதம்

ரசிகர் ஒருவர் உருவாக்கிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், விஜய் ஒரு கையைத் தூக்கியவாறு மெர்சலாக இருக்கிறார். மலையாள ரசிகர் உருவாக்கியதாக கூறப்படும் அப்போஸ்டர், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை நினைவு படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், விஜய் ரசிகர்களுக்கும், சீமான் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூகவலைதளங்களில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை போஸ்டர்

சர்ச்சை போஸ்டர்

இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் அவரது ரசிகர்கள் ஒட்டியபோஸ்டர் ஒன்றும் இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில், நடிகர் விஜய்யுடன், அண்ணாவும் பெரியாரும் இருக்கிறார்கள். மேலே "நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தான் சர்ச்சைக்கு காரணம்.

போஸ்டருக்கு எதிர்ப்பு

போஸ்டருக்கு எதிர்ப்பு

திமுக மூத்த நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் விஜய்யின் இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்ணாவுடனுடம், பெரியாருடனும் ஒப்பிடும் அளவுக்கு விஜய் என்ன சாதித்துவிட்டார் என பலரும் கேள்விக்கேட்கிறார்கள்.

விஜய்க்கு பிடிக்காது

விஜய்க்கு பிடிக்காது

உண்மையில் நடிகர் விஜய்க்கு இதுபோன்று தன்னை அண்ணா மற்றும் பெரியாருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டுவது பிடிக்காத விஷயம். விஜய்யை நன்கு அறிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். பொதுவாகவே அவர் மிகவும் அமைதியானவர். ரசிகர்கள் மீது அதிக மதிப்பு வைத்திருப்பவர்.

ரசிகர்களின் ஆர்வமிகுதி

ரசிகர்களின் ஆர்வமிகுதி

ஆனால் சில ரசிகர்கள் ஆர்வமிகுதியால் செய்யும் இதுபோன்ற காரியங்கள், அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடுகின்றன. விஜய்யின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே ரசிகர்கள் இவ்வாறு செய்கின்றனர். ஆனால் இதுபோன்ற செயல்கள் அவரை காயப்படுத்தும் என்பதை ரசிகர்கள் அறிவதில்லை. இனியாவது விஜய் ரசிகர்கள் புரிந்து நடப்பார்கள் என நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X