twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வதைபடும் வைரமுத்து... ஏன் மௌனம் காக்கிறது கலையுலகம்?

    By Shankar
    |

    Recommended Video

    சிக்கலில் சிக்கிய வைரமுத்து.. திரையுலகம் மௌனம் காப்பது ஏன் ?

    வைரமுத்து தமிழ் சினிமாவுக்கு தன் பாடல்களால் பெருமை சேர்த்தவர் என்பதெல்லாம் சம்பிரதாய புகழ். சினிமா பாடல்களில் புது புது சொற்றொடர்களை புகுத்தி தமிழுக்கு பெருமை கூட்டிய படைப்பாளி அவர். இன்றைக்கு குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் வதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்.

    சினிமா மேடைகளிலும், பொது மேடைகளிலும் வைரமுத்து பேசுகின்ற போது மேற்கோள் காட்டுவதற்கு இலக்கியங்களையும், ஆய்வு கட்டுரைகளையும், அறிஞர்கள் கருத்துகளையும் துணைக்கு அழைத்துக் கொள்வது வாடிக்கை.

    Why film industry keep silence in Vairamuthu issue?

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி பேசியதிலும், எழுதியதிலும் அப்படி ஒரு மேற்கோள் கையாளப்பட்டதன் விளைவாக வைரமுத்து மட்டுமல்ல, அவரது வம்சாவழிகளையும், குடும்பத்தாரையும் அநாகரிக வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். தொலைக்காட்சி ஊடகங்கள் அதன் அனல் குறையாமல் ஊதிப் பெரிதாக்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றன.

    தார்மிக அடிப்படையில் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் எப்படி பேசலாம் என்கிற கேள்வி உரக்க ஒலிக்கிறது. எப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கட்டளையும் கர்ண கொடூரமாக கர்ஜிக்கப்படுகிறது, அரசியல் தூண்டலால். இதற்கு எதிராக கண்டித்து அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மதவாத, ஜாதிய அமைப்புகளின் அநாகரிக பேச்சுகளை கண்டித்தார்கள், ஆனால் வைரமுத்துவுக்கு ஆதரவு குரல் கொடுக்கவில்லை. அவர் தொழில் சார்ந்த திரையுலகம் கனத்த மௌனத்துடன் வேடிக்கை பார்த்து வருகிறது. இயக்குநர் பாரதிராஜா மட்டும்தான் குரல் கொடுத்தார். ஆனால் அதுவும் சர்ச்சைக்குரலாகிவிட்டது.

    எழுத்துலகின் அறிவுஜீவிகள் அறிவு பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தங்கள் கடமையை முடித்துக் கொண்டார்கள். காவிரி பிரச்சினை, ஈழ தமிழர் பிரச்சினை, ஜல்லிகட்டு போராட்டம், விவசாயிகள் பிரச்சினை என அனைத்து பொது விஷயங்களிலும் கருத்து சொன்ன, கண்டித்து அறிக்கை வெளியிட்ட திரைப் பிரபலங்கள் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. திரைப்பட அமைப்புகள் சார்பில் கூட வைரமுத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடவில்லை.

    இதற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்? திரைப் பிரபலங்கள் சிலரை உரசிப் பார்த்த போது, "வைரமுத்து தன் கவிதை தொழிலுக்கு மட்டும் நேர்மையான படைப்பாளி. மற்றபடி மனிதாபிமானி கிடையாது. தனக்கு போட்டியாக வந்த இளம் பாடலாசிரியர்களை பாராமுகத்துடன் பார்த்தவர். பிறருக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை தன் பிரபலத்தை வைத்து தட்டிப் பறித்தவர். பிறருக்கு பிரச்சினை வந்த போதெல்லாம் மௌனம் காப்பவர். தனக்கு பின் தமிழ் சினிமாவுக்கு நல்ல பாடலாசிரியர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பை புறந்தள்ளியதன் விளைவு திரைப்பட பாடலாசிரியர்கள் கூட இவருக்கு ஆதரவாக களமிறங்க தயாராகவில்லை," என்றார்கள்.

    தனித்து விடப்பட்டிருக்கும் வைரமுத்து வருத்தம் தெரிவித்ததுடன் சரி. தன் நிலைப்பாட்டை தைரியமாக இன்று வரை அறிவிக்கவில்லை. அவருக்கு ஆதரவாகக் களமிறங்குவது மண குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என்று மௌனம் காக்கிறது கோடம்பாக்கம்.

    - ராமானுஜம்

    English summary
    Why film industry keep silence in Vairamuthu issue? Here is an analysis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X