சல்லடை போட்டு சலித்ததை போல செல்வராகவனை வீசியெறிந்தாரா கீதாஞ்சலி? மனசு வலியோட சொன்னது இதைத்தானா?
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ரத்தினக் கல் என்று சொல்லலாம். இவரது படங்கள் பெரும்பாலும் அவுட் ஆஃப் த பாக்ஸ் சப்ஜெக்ட்டாகத்தான் இருந்துள்ளது. இன்றைக்கும் அவரது படங்களின் இரண்டாம் பாகங்களை கேட்கும் ரசிகர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விடை தெரியாத கேள்விகள் ரசிகர்கள் மனதில் ஏகப்பட்ட கேள்விகளை உருவாக்கி உள்ளது.
அதாவது செல்வராகவனின் இரண்டாவது மனைவி கீதாஞ்சலி. இவர் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் இயக்குநர். செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு இடையில் மனக்கசப்பு அதிகம் ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
அதன் பின்னர்தான் கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். கடந்த 2011ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சமீபகாலமாகவே செல்வராகவனும் கீதாஞ்சலி செல்வராகவனும் விவாகரத்து செய்யப் போவதாக கிசுகிசுக்கள் பரவி வந்தது.

விவாகரத்தா?: தற்போது அந்த கிசுகிசு தீவிரமாகி உள்ளது. அதற்கு ஏற்றதைப் போல கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த செல்வராகவனின் புகைப்படங்களை நீக்கிவிட்டார். ஒரு திருமணத்தில் எடுத்த புகைப்படம் மட்டும் உள்ளது. ஆனால் செல்வராகவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீதாஞ்சலி உடனான அனைத்து புகைப்படங்களும் வீடியோக்களுமே உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற போகிறார்களா என்ற கேள்வி அதிகரித்து வருகிறது.
குடும்ப நிகழ்ச்சியில் கூட: சமீபத்தில் செல்வராகவனின் தம்பி தனுஷ் தனது இட்லி கடை படத்தின் வெற்றிக்குப் பின்னர் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்றார். அப்போது கூட கீதாஞ்சலி உடன் செல்லவில்லை, செல்வராகவன் மட்டும் சென்றிருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில், நான் இப்போது மிகவும் மோசமான கால கட்டத்தை கடந்து வந்து உங்கள் முன் அமர்ந்து கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்துள்ளேன் அது குறித்து நான் இப்போது வெளிப்படையாக பேச விரும்பவில்லை, சில மாதங்களில் உங்களுக்கு தெரியவரும்" என்று தெரிவித்தார்.
ரசிகர்கள் கருத்து: இப்படியான நிலையில் கீதாஞ்சலியின் இந்த நடவடிக்கை இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்னை? விவாகரத்து செய்யப்போகிறார்களா? உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி உள்ளது. சில இணையவாசிகளோ விவாகரத்து எல்லாம் செய்ய மாட்டார்கள் முன்பு பரவியதைப் போன்ற கிசுகிசுதான் இதும் என்று பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராமில் தனது பெயரை கீதாஞ்சலி செல்வராகவன் என்றே குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











