விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி பட ஷூட்டிங் தள்ளிப்போனது ஏன்?
சென்னை: விஜய், அஜித், தனுஷ், விஜய்சேதுபதி நடிக்கும் படங்களின் ஷூட்டிங் தள்ளிப்
போனது ஏன் என்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளன.
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர்
மாநகரம், கார்த்தி நடித்த கைதி படங்களை இயக்கியவர். எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ்
நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு,
ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடக்க
இருக்கிறது. இங்கு கடந்த 1 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு
நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அங்குள்ள சிறைச்சாலையில் செட் அமைத்து
ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தனர். செட் வேலை முடியாததால், ஷூட்டிங்
தள்ளிப்போயுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதன் ஷூட்டிங் திருநெல்வேலியில் தொடங்குவதாக இருந்தது. அங்கு கிராமம் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகவும் செட் வேலை முடிவடையாததாலும் ஷூட்டிங் வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு
முன் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் வரும் 13 ஆம் தேதி
தொடங்குகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஷூட்டிங், இந்த வாரம் தொடங்குவதாக இருந்தது. ஹீரோயின் மேகா ஆகாஷ் மற்றப் படங்களில் பிசியாக இருப்பதால், ஷூட்டிங் அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











