நீங்க எதுக்கு மும்தாஜ் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தீங்க??
சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வி தான், 'நீங்க எதுக்கு மும்தாஜ் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தீங்க?'
சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த மும்தாஜை பிக் பாஸ் 2 வீட்டில் பார்த்த ரசிகர்கள் முதலில் மகிழ்ச்சி அடைந்தார்கள். மும்தாஜ் டா, கவர்ச்சி மலைடா என்று ஆனந்தப்பட்டனர்.

கவர்ச்சி நடிகையாக இருந்தும் பிக் பாஸ் 2 வீட்டில் கவர்ச்சியாக உடையணியாதவர் மும்தாஜ் தான். அதனாலேயே பார்வையாளர்களுக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டது. ஆனால் டாஸ்க் என்று வந்தால் எனக்கு உடம்பு சரியில்லை, அந்த பிரச்சனை இருக்கிறது, இந்த பிரச்சனை இருக்கிறது முடியாது என்கிறார்.
உடல்நல பாதிப்பு இருப்பது புரிகிறது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் டாஸ்க் கொடுப்பார்கள், செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா? அப்படி இருந்தும் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளீர்கள்?
உங்களின் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து அறிந்து பாவப்பட்ட பார்வையாளர்கள் தற்போது உங்களை கிண்டல் செய்கிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு தேவையா மும்தாஜ்?


Click it and Unblock the Notifications











