For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆர்யாவை கதாநாயகிகளுக்குப் பிடிப்பது ஏன்? படவிழாவில் கலகலப்பு!

  By Shankar
  |

  ஆர்யாவைப் கதாநாயகிகளுக்குப் பிடிக்க என்ன காரணம் அவரது நட்பும், பழகும் முறையும்தான் என்று கவிஞர் பா விஜய் கூறினார்.

  யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் 'யட்சன்'.

  ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். 'யட்சன்' என்றால் குபேரன், இயக்குபவன் என்று பொருளாம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. அதுவே படத்தின் அறிமுக விழாவாகவும் அமைந்தது.

  Why heroines like Arya? Pa Vijay's explanatiun

  விழாவில் படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் பேசும் போது, " இது 'ஆரம்பம்' படத்துக்கு முன்பே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்த விகடனில் வந்த சுபா அவர்களின் தொடர்கதை திரை வடிவம் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள் நன்றாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ளன. கம்போசிங், பாட்டு என்று நாங்கள் வெளிநாடு எல்லாம் போய் சிரமப்படவில்லை. தி நகரிலுள்ள ஒரே ரூமில்தான் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் உருவாக்கினோம்.

  ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ் என்னுடன் இணைந்துள்ள 2 வது படம்.

  ஆர்யாவுடன் இது எனக்கு 5 வது படம். ஆர்யா என் ஹீரோ. அவரைப் பார்த்தாலே எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம் என்பவர். அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார்.

  நான் எப்போ படம் தொடங்கினாலும் உன் தம்பியையும் நடிக்க வைப்பா என்பார்கள் அம்மா. அவருக்கு ஏற்ற மாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். ஆர்யா-கிருஷ்ணா இரண்டு பேரையும் நடிக்க வைக்க படாதபாடு பட்டேன். தீபா சன்னதிக்கு நல்ல நடிப்புக்கு இடம் தருகிற பாத்திரம்.

  யுவன் என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரிய பலமாக தொடர்பவர். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கு தனியா போட வேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது. படப்பிடிப்பே ஜாலியாக கலாட்டாவாக போனது,'' என்றார்.

  பா விஜய்

  பாடலாசிரியர் பா. விஜய் பேசும் போது, " நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து இது எட்டாவது படம். அதிலும் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒரு நட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில் நான் போனதில்லை. நண்பர்களைப் பார்ப்பது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது.

  ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை தெரியாது...இப்போது புரிகிறது. நட்புக்குஅவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர்.

  இதுவரை மூவாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை. நடிக்க வந்தபிறகு அப்படி பரப்பி விட்டார்கள். இதன் பாடல்களும் 'சர்வம்' படத்தின் பாடல்களைப் போல பெரிய வெற்றியடையும்,'' என்றார்.

  யுவன் சங்கர் ராஜா

  இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா பேசும்போது, ''இந்த விஷ்ணுவர்தனின் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார் என்ன மேஜிக் செய்திருக்கிறார்? என்கிறார்கள். விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் பழகினாலே நமக்கும் வந்து விடும். அவரை பள்ளி நாட்களிலிருந்தே தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர்,'' என்றார்.

  English summary
  Why all heroines want to act with Arya? Here is lyricist Pa Vijay's explanation.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X