அந்த நடிகருக்காக மட்டும்தான் இதை செய்தேன்.. நடிகை பிரியாமணி!

ஹைதராபாத் : நடிகை பிரியாமணி இந்தியில் வெளியாக உள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி அடுத்தடுத்த படங்களில் பல மொழிகளில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரபல முன்னணி நடிகருக்காக மட்டும் தான் அதை நான் செய்தேன் என கூறியுள்ளார்.

பிரமாதமான நடிப்பை

பிரமாதமான நடிப்பை

பாரதிராஜாவின் கண்களால் கைது செய் பாலுமகேந்திராவின் அது ஒரு கனா காலம் என லிஜெண்டரி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியாமணி அதைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த வகையில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரனில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி பல பாராட்டுகளை பெற்றதோடு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

மலைக்கோட்டை,தோட்டா,ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில கமர்சியல் ஹிட்டுக்களையும் கொடுத்துள்ள பிரியாமணி திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் கடைசியாக தமிழில் சாருலதா என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

தி ஃபேமிலி மேன்

தி ஃபேமிலி மேன்

தற்பொழுது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கும் பிரியாமணி தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். கதையில் தன்னுடைய கதாபாத்திரம் வலுவாக இருந்தால் மட்டுமே அதில் நடிக்க ஒப்புக் கொண்டு வரும் பிரியாமணி இந்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் தி ஃபேமிலி மேன் சீரிஸில் நடித்துள்ளார்.

வெங்கடேஷ் உடன் நடிப்பதால்

வெங்கடேஷ் உடன் நடிப்பதால்

இந்த நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது. தெலுங்கில் உருவாகி இருக்கும் நாரப்பாவில் வெங்கடேஷுக்கு ஜோடியாக சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பலமுறை நானும் வெங்கடேஷும் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் வந்தது அப்போதெல்லாம் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அது கைகூடாமல் போனது. அதனாலேயே இந்த முறை நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக பல படங்களுக்காக வைத்திருந்த கால்சீட்டை நாரப்பா படத்திற்காக ஒதுக்கி நடித்துக் கொடுத்தேன். பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு வெங்கடேஷ் உடன் நடிப்பதால் இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளேன். என கூறியுள்ளார். பிரியாமணி தெலுங்கில் விராட பருவம் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X