ஓவியாவிடம் அந்த விஷயம் பிடித்தது... அது தான் எனக்கு தேவை: 90 எம்எல் இயக்குனர்

நேரடியாக பேசுவது ஓவியாவிடம் பிடித்த விஷயம் என இயக்குனர் அனிதா கூறியுள்ளார்

Recommended Video

ஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ

சென்னை: 90 எம்எல் திரைப்படத்திற்கு ஓவியாவை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை இயக்குனர் அனிதா உதீப் தெரிவித்துள்ளார்.

ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸில் அவருடைய உண்மை முகம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனையடுத்து புகழின் உச்சியை அடைந்தார். அவர் இப்போது 90 எம்எல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

Why I chose Oviya?: Says 90 ml Director

90 எம்எல் திரைப்படத்தைப் பற்றி பேசியுள்ள இயக்குனர் அனிதா உதீப், ஓவியாவின் நேரடியான பேச்சு மிகவும் பிடித்ததனால் இப்படத்தில் நடிக்க சரியான ஆளாக இருப்பார் என முடிவுசெய்ததாகக் கூறியுள்ளார்.

பொதுவாக பெண்ணை மையப்படுத்தும் படங்கள் என்றாலே துரோகம் செய்த ஆணை பழிதீர்க்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த படம் பெண்களின் ஆசைகள், மற்றும் பெண்களின் உலகுக்குள் போகிறது. ஐந்து பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க நகைச்சுவையான திரைப்படம். பிக்பாஸில் பார்த்த ஓவியா எப்படியோ அதேபோல் நேரடியாக மனதில் பட்டதை பேசும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

குளிர் 100 டிகிரி திரைப்படத்திற்கு பிறகு அமெரிக்கா சென்று சினிமா இயக்குவது தொடர்பாக படித்துள்ளார். விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா பாடலை பாடிய இயக்குனர் அனிதா உதீப், இந்த படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X