விஜய் கிட்ட நான் ஏன் நடிக்க chance கேக்கணும்... சஞ்சீவ்வின் நச் பதில்!

சென்னை: நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் சின்னத்திரையில் பிரபலமான முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் சஞ்சீவ் தோன்றுவார்.

விஜய்யின் மிக நெருங்கிய நண்பரான சஞ்சீவ் விஜய் படங்களில் ஏன் நடிப்பதில்லை என்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்

 நெருங்கிய நண்பரான

நெருங்கிய நண்பரான

ஓரளவுக்கு திரைத்துறை பின்புலத்தை மையமாகக் கொண்ட குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் சஞ்சீவ். நடிகர் விஜய்யின் மிகவும் நெருங்கிய நண்பரான இவர் தமிழில் சில படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பு தோற்றத்திலும் நடித்து உள்ளார் .

 சின்னத்திரையில் முன்னணி ஹீரோ

சின்னத்திரையில் முன்னணி ஹீரோ

விஜய்யின் ஆரம்ப கட்ட படங்களான நிலாவே வா படத்தில் விஜய்யின் நண்பராக நடித்த சஞ்சீவ் அதைத் தொடர்ந்து பத்ரி, புதிய கீதை போன்ற படங்களில் நண்பர்களில் ஒருவராக நடித்து வந்தார். பின் சினிமாவிற்கு மிகப்பெரிய இடைவெளி விட்டு சீரியல் தொடர்களில் கவனம் செலுத்தி வந்த சஞ்சீவ் இப்போது தொலைக்காட்சிகளில் நடிகராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் வெற்றிகரமாக பணியாற்றியுள்ளார்

 சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி பல வசூல் சாதனைகளை செய்த மாஸ்டர் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஓரிரு காட்சிகளில் மட்டும் சஞ்சீவ் வந்து செல்வார் இப்பொழுது ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் யானை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

 பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

இவ்வாறு சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் சஞ்சீவ் நடிகர் விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். சிறுவயது முதலே பள்ளி,கல்லூரி என விஜய்யுடன் ஒன்றாகவே படித்த சஞ்சீவ் இன்றுவரை மிகச் சிறந்த நண்பராக விஜய்க்கு இருந்து வருகிறார். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகச்சரியாக தன்னுடைய கருத்துகளை எடுத்து வைத்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.

Recommended Video

'Beast பத்தி சொல்ல நிறைய இருக்கு' | Beast | Pooja Hegde | Filmibeat Tamil
 நடிக்க சான்ஸ்

நடிக்க சான்ஸ்

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் நீங்க விஜய் படங்களில் ஏன் நடிப்பதில்லை என கேட்டதற்கு விஜய்யும் நானும் சிறுவயது முதலே நண்பர்கள். எங்களுக்குள் ஒரு பாலிசி என்னவென்றால் பர்சனல் ரீதியாக ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளலாம் ஆனால் ப்ரொபஷ்னல் ரீதியாக யாரும் யார்க்கிட்டயும் உதவி கேட்க கூடாது என்பதே எங்க பிரெண்ட்ஷிப்பில் முதல் பாலிசி . அதை நானும் சரி விஜய்யும் சரி மற்ற நண்பர்களும் சரி இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் பர்சனல் ரீதியாக எனக்கு ஏதாவது தேவை பணப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது விஜய் கேள்வி பட்டாலே அடுத்த நிமிடமே வீட்டிற்கு வந்து உதவி செய்து விட்டு செல்வார். எனவே விஜய் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என நச்சென்று பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X