தாலியை கழட்டி வச்சதுக்கு காரணம் இருக்கு.. பிக்பாஸ் குறித்து புட்டு புட்டு வைக்கும் மதுமிதா!

Recommended Video

Bigg Boss Madhu viral video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, தான் தாலியை கழட்டிவிட்டு சென்றது ஏன் என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, நிகழ்ச்சியின் இறுதிவரை செல்லும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் சகஹவுஸ்மேட்ஸ்களின் டார்ச்சருக்கு ஆளாகி மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றார்.

கத்தியால் கையை கிழித்து தன்னை தானே வருத்திக் கொண்டதால் பிக்பாஸின் முக்கிய விதியை மீறியதாக கூறி பிக்பாஸ் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

மதுமிதா வெளியே வந்தது முதல் அவரது பெயர் அடிக்கடி செய்திகளில் இடம் பெற்று வந்தது. தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகமே மதுமிதா மீது போலீஸில் புகார் அளித்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த மதமிதா, தன் மீது விஜய் டிவி புகார் அளித்திருப்பது தனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது, அந்த புகார் முற்றிலும் பொய்யானது என்றார்.

விஜய் டிவி மீது புகார்

விஜய் டிவி மீது புகார்

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் இதனை கண்டிக்கவில்லை என்றும் மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் விஜய் டிவிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் வலுத்தது.

சர்ச்சையான தமிழ் பெண்

சர்ச்சையான தமிழ் பெண்

இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மதுமிதா தான் தாலியை கழட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சிக்கு சென்றது ஏன் என விளக்கமளித்துள்ளார். மதுமிதா தான் ஒரு தமிழ் பெண் என்று கூறியது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

வைரலான வீடியோ

வைரலான வீடியோ

இதுதொடர்பாக பேசிய வனிதா, தமிழ் பெண் என்று சொல்லும் மதுமிதா ஏன் தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்தார் என கேள்வி எழுப்பி பிரச்சனையை பெரிதாக்கினார். அப்போது மாமா மகனான மோஸஸை திருமணம் செய்து 3 மாதங்களே ஆகியிருந்த மதுமிதா, கைவிரலை காண்டிபித்து மோதிரம் போட்டியிருக்கிறேன் என்றார். இந்த வீடியோ அப்போது வைரலானது.

தவிர்க்க சொன்னார்கள்

தவிர்க்க சொன்னார்கள்

இந்நிலையில் தனது பேட்டியில், தாலியை கழட்டியது குறித்து பல திடுக் தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நான் நிகழ்ச்சிக்குள் செல்லும் முன்பு என்னுடைய திங்ஸ்களை கேரவனில் வைத்து செக் செய்தார்கள். அப்போது பெரிய நகைகளை தவிர்க்க வேண்டும் என்றார்கள்.

மைக்கில் உரசும்

மைக்கில் உரசும்

தாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும். அதனால் தாலி அணிய வேண்டாம் என்றார்கள். அதற்கு நான் திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அதோடு நான் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுபவள் என்னால் கழட்ட முடியாது என்றேன்.

அறுந்துட்டா என்ன செய்வீங்க?

அறுந்துட்டா என்ன செய்வீங்க?

அதற்கு டாஸ்க்கின் போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டது எனக்கு சரி எனப்பட்டது. இதுகுறித்து என் கணவரிடம் பேசினேன் அவரும் சரி கழட்டிவிடு என்றார். இதைத்தொடர்ந்துதான் நான் தாலியை கழட்டினேன் என மதுமிதா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X