twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீஸ்ட் படம் ஓடினா எனக்கென்ன, ஓடலைன்னா எனக்கென்ன?...கே.ராஜன் ஆவேசம்

    |

    சென்னை: நேற்று படவிழா ஒன்றில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பீஸ்ட் படம் பற்றியும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கும் நடிகர் எனக்குறிப்பிட்டும் பரபரப்பாக பேசினார். அவர் ஏற்கெனவே முன்னணி நடிகர்கள் படம் ஓடவில்லை என்றால் பாதி சம்பளத்தை திருப்பித்தரவேண்டும் என்று பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

    Beast Box Office Collection Day 2: 100 கோடி கிளப்பில் இணைந்த பீஸ்ட்.. சந்தோஷத்தில் சன் பிக்சர்ஸ்! Beast Box Office Collection Day 2: 100 கோடி கிளப்பில் இணைந்த பீஸ்ட்.. சந்தோஷத்தில் சன் பிக்சர்ஸ்!

    நடிகர்களை கண்டித்து பேசும் கே.ராஜன்

    நடிகர்களை கண்டித்து பேசும் கே.ராஜன்

    தயாரிப்பாளர் கே.ராஜன் எப்போதும் அதிரடியாக மேடையில் பேசக்கூடியவர். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து ஒன்றுமில்லாமல் போவதை அடிக்கடி மேடையில் குறிப்பிட்டு பேசுவார். நடிகர்கள் கோடிக்கோடியாக வாங்கி மேலே செல்கிறார்கள், படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர் ஒன்றுமில்லாமல் போகிறான், படம் தோல்வி அடைந்தால் நடிகர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று பேசி வருகிறார்.

    பாதி சம்பளத்தை நடிகர்கள் திருப்பி தரவேண்டும்

    பாதி சம்பளத்தை நடிகர்கள் திருப்பி தரவேண்டும்

    சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா முன் ஒரு கோரிக்கை வைத்து தயாரிப்பாளர்கள் சார்பாக பேசினார். அதற்கு பாரதிராஜாவும் பதிலளித்தார். அதேபோல் ராதேஷியாம் தோல்விக்குப்பின் நடிகர் பிரபாஸ் பாதி சம்பளத்தை திருப்பிக்கொடுத்ததைச் சொல்லி இங்குள்ள முன்னனி நடிகர்களும் அதேபோல் திருப்பித்தரவேண்டும் என்று பேசி வருகிறார்.

    படவிழாவில் கே.ராஜன் பரபரப்பு பேச்சு

    படவிழாவில் கே.ராஜன் பரபரப்பு பேச்சு

    இதேபோல் ஒரு தொடாதே பட நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், "'தொடாதே' பாடல்களையும் டிரைலரையும் பார்த்த போது படம் நல்ல கருத்தை சொல்ல வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. சிறிய படம், பெரிய படம் என்று சொல்வார்கள், உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பெரிய வெற்றி பெறும் படங்கள் தான் பெரிய படம், பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்களே சிறிய படம்.

    100 கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்

    100 கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்

    பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம், 30 கோடி ரூபாய் தான் வசூலிக்கிறது. ஆனால், ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை 110 கோடி ரூபாய் என்று உயர்த்தி விடுகிறார்கள். இப்ப கூட ஒரு நடிகர், 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தவர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். 100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க, இல்லைனா வராதீங்க என்று சொல்றாராம். இப்படி அவர்களுக்கு 100 கோடி சம்பளமாக கொடுத்தால் படம் என்ன ஓடுகிறதா, அதிலும் நஷ்ட்டம் தான் வருகிறது. நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லல. நீங்கள் வேற மாதிரி போட்றாதீங்க.

    Recommended Video

    BEAST | Nelson, Anirudh, Pooja hegde at Vetri Theatre Chrompet | Tamil Filmibeat
    ‘பீஸ்ட்' படம் ஓடினால் எனக்கென்ன ஓடாவிட்டால் எனக்கென்ன

    ‘பீஸ்ட்' படம் ஓடினால் எனக்கென்ன ஓடாவிட்டால் எனக்கென்ன

    இப்போது கூட என்னை வெளியில் பேட்டி எடுத்தார்கள், அரை மணி நேரம் எடுத்த பேட்டியில், பீஸ்ட் படம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள், பீஸ்ட் ஓடினால் எனக்கென்ன, ஓடலனா எனக்கென்ன, என் கிட்ட பீஸ்ட்...பீஸ்ட்...என்று கேக்குறாங்க. இதை சொல்றதுக்காக நான் பயப்படவில்லை. காரணம், நான் விஜய் கிட்ட தேதி கேட்டு நிக்க போறதில்ல, பணம் கேட்டு நிக்க போறதில்ல. தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும், அதற்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்காக தான் நான் குரல் கொடுக்கிறேன்". இவ்வாறு கே.ராஜன் கூறினார்.

    English summary
    Producer K. Rajan said that reporters ask me about the Beast movie and I have no opinion about that movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X