twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்றும் எட்டாக்கனியாகவே இருக்கும் ஆஸ்கர் விருது…!

    |

    சென்னை : பல தரமான திரைப்படங்கள் உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தாலும் கூட சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது மட்டும் இன்றும் நமக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. ஏன் நமது இந்திய சினிமாவிற்கு மட்டும் ஆஸ்கார் விருது கிடைப்பது இல்லை என்று சினிமா ரசிகர்களுக்கு பெரிய கேள்வி குறியாக உள்ளது.

    இந்திய சினிமாவில் வருடத்திற்கு சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் வெளிவருவதாக ஒரு கருத்து கணிப்பு சொல்லுகிறது. ஆனால் அதில் சில படங்கள் மட்டும் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான இந்திய படங்கள் கடைசி சுற்று வரை சென்று திரும்பி இருக்கிறது.

    Why Indian films are not selected for Oscars

    கடந்த வருடம் இந்திய சினிமாவில் மட்டும் சுமார் ஒரு 25 முதல் 30 படங்கள் தேர்வு குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்டது. அதுவும் தமிழில் இருந்து மூன்று படங்கள் மட்டுமே தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுப்பட்டது.

    சல்மான் கானின் தபங் 3 படத்துக்கு வந்த இப்படியொரு சிக்கல்.. என்ன செய்யப் போகிறது படக்குழு?சல்மான் கானின் தபங் 3 படத்துக்கு வந்த இப்படியொரு சிக்கல்.. என்ன செய்யப் போகிறது படக்குழு?

    அதில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' மற்றும் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவான விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்'மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி தனுஷ் நடித்த 'வட சென்னை' ஆகிய படங்கள் ஜூரிக்காக திரையிடப்பட்டு பின் நிராகரிக்கப்பட்டன. மேலும், இந்த பட்டியலில் 'அன்புள்ள தோழர்' என்ற தெலுங்கு படமும், 'குருக்ஷேத்ரா' என்ற கன்னடம் தேர்வுக்குழுவுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன.

    Why Indian films are not selected for Oscars
    இந்தி திரையுலகில் இருந்து அதிக படங்கள் இடம் பெற்றன. இதில் 'கல்லி பாய்' என்ற திரைப்படம் கடைசி சுற்று வரை சென்று திரும்பியது. இந்த விருது எதை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது, இந்தியா திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டாலும் என் ஒரு விருது கூட வாங்க முடியவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    Why Indian films are not selected for Oscars

    இதுவரை இந்திய திரையுலகில் கமல்ஹாசனின் திரைப்படம் தான் அதிக முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தி திரைப்படமான லகான் திரைப்படம் கடைசி சுற்றில் வெளியேறியது.

    ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும் நம் ரசிகர்கள் படத்திற்கு கொடுக்கும் வரவேற்ப்பும் உச்சாகமும் பல ஆஸ்கார் விருதை பெற்றதற்கு சமம்.

    English summary
    Why Indian films are not selected for Oscars
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X