ஐஸ்வர்யா ராய் ஏன் கணவர் அபிஷேக்கை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை?
மும்பை: ஐஸ்வர்யா ராய் ஏன் இன்ஸ்டாகிராமில் தனது கணவரை ஃபாலோ செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் ஒருவழியாக கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார்.
தான் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு கிளம்பும் முன்பு இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார் ஐஸ்.

புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராமில் தனது மகளின் புகைப்படங்கள் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராய். பெரும்பாலும் மகள் ஆராத்யாவின் புகைப்படங்களை தான் வெளியிடுகிறார்.

புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராமில் தனது மகளின் புகைப்படங்கள் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராய். பெரும்பாலும் மகள் ஆராத்யாவின் புகைப்படங்களை தான் வெளியிடுகிறார்.

அபிஷேக்
தற்போது ஐஸ்வர்யாவை இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ஆனால் அவர் யாரையும் பின்தொடரவில்லை. கணவர் அபிஷேக் பச்சனை கூட அவர் பின்தொடராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாமனார்
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள அமிதாப் பச்சன் யாரையும் பின்தொடரவில்லை. மாமனார் அமிதாப் வழியில் ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராமில் யாரையும் பின்தொடரவில்லையோ?

கோபம்
முன்னதாக இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கியதும் தன்னை அதிகம் பேர் பின்தொடராததால் ஐஸ்வர்யா தனது குழுவினரை திட்டினார் என்று செய்திகள் வெளியானது.


Click it and Unblock the Notifications











