விஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி
சென்னை: விஜய்யை மீண்டும் இயக்க பயமாக உள்ளதாக அட்லி தெரிவித்துள்ளார்.
ராஜா ராணி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லி. அதன் பிறகு அவர் இயக்கிய தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களிலும் விஜய் தான் ஹீரோ.
எப்படி இயக்குனர் சிவா அஜித்தை குத்தகைக்கு எடுத்துள்ளாரோ, அது போன்று அட்லி விஜய்யை எடுத்துள்ளார்.

அட்லி
தெறி, மெர்சலை அடுத்து அட்லி இயக்கும் படத்திலும் விஜய் தான் ஹீரோ. சர்கார் படத்தில் பிசியாக இருக்கும் விஜய் அதை முடித்துவிட்டு அட்லி படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய்யை வைத்து மீண்டும் படம் பண்ண பயந்து வருவதாக அட்லி தெரிவித்துள்ளார். அவரின் பயத்திற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

விஜய்
நான் வழக்கமாக படம் எடுக்க பயப்படும் ஆள் இல்லை. ஆனால் இம்முறை பொறுப்பு அதிகம் என்பதால் பயமாக உள்ளது. இம்முறை வித்தியாசமான பிரமாண்ட படத்தை அளிக்க விரும்புகிறேன். படத்திற்கான கதை கிடைத்துவிட்டது. ப்ரீப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. நீங்கள் எதிர்பார்க்காததை அளிக்க உள்ளேன் என்று பொடி வைத்து பேசுகிறார் அட்லி.

ரசிகர்கள்
இந்த படத்தில் புதிதாக எதை கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நிச்சயம் புதிதாக அளித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. என்னால் 100 படங்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் தான் முன்னேறிச் செல்ல முடியும். இன்னும் என்ன செய்ய முடியும் என்ற பயத்தில் சில நாட்கள் இருந்தேன் என்பதே உண்மை என்கிறார் அட்லி.

கால்ஷீட்
அட்லிக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய் என்றால் நிச்சயம் அவர் மீது நம்பிக்கையில்லாமல் இருக்காது. தெறி, மெர்சலை போன்று மீண்டும் ஒரு சிறப்பான படத்தை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். விஜய், அட்லி மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











