எனக்கு ரேடியோ என்பது ரேடியோ அல்ல இசைஞானி - ஒரு ரசிகனின் வாழ்த்து

இன்று இசைஞானி இளையராஜாவின் 77வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இசையோடும் காதலோடும் கொண்டாடும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

By Staff

சென்னை: தமிழ் அடையாளத்தை, தமிழ் மக்களின் வாழ்வியல் இசையை, தனது தனித்துவ இசை மொழியில் சொன்னவர் இளையராஜா. இசையின் ராஜாவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இசைஞானிக்கு இன்று 77வது பிறந்தநாள். பால்ய பருவத்தில் இருந்தே ராஜாவின் இசையை ரசித்து ருசித்து வளர்ந்த கோடான கோடி ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு ரசிகரின் கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

Recommended Video

Ilayaraja Birthday special | Best BGMs of Ilayaraja | Happy Birthday Ilayaraja

இசைஞானி அவர்களுக்கு என் அன்பு வணக்கம்

Why is Ilaiyaraaja The Raaja of Raaga fans letter to Ilayaraja


நான் உங்களின் ரசிகன் பேசுகிறேன்.

மாட்டு வண்டியிலேறி
"அன்னக்கிளி" திரைப்படம் பார்க்கச்சென்றபோது
நான் அரைக்கால் சட்டைப் போட்டிருந்த
தொடக்கப்பள்ளி மாணவன்.

என்னைத் தூக்கி வளர்த்த
என் அம்மாயி, தாத்தாவோடு
பார்த்த திரைப்படம் அது.

இன்று அவர்கள் இல்லை
ஆனால் உங்களின் அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல்கள் இருக்கின்றன

அந்தப் பாடல்களை
கேட்கும் போதெல்லாம்
என் அம்மாயி, தாத்தா அருகிலிருப்பதாகவே உணர்கிறேன்.

மாட்டு வண்டிகளை நிறுத்த இடமில்லாமல்
கிராமத்து மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் அன்னக்கிளி.

வயல்களில் தெம்மாங்கு பாடல்களை இட்டுக்கட்டி பாடிக்கொண்டிருந்த
நம் மக்கள்
உங்களின் அன்னக்கிளி பாடலை பாடிக்கொண்டே வேலை செய்தார்கள்.
அன்றிலிருந்து நானும் உங்களின் ரசிகனானேன்.

அதன் பிறகு
நீங்கள் இசையமைத்த எத்தனையோ திரைப்படங்களை
ஓடி ஓடி பார்த்திருக்கிறேன்.
படம்பார்த்து முடித்தவுடன்
எழுந்துவர மனமில்லாமல்
திரையையே உற்று நோக்கிய பைத்தியங்களில் நானுமொருவன்.

ரேடியோ இல்லாமல்
எனக்கு வயல்வேலைகள் ஓடாது,
ஆடு மாடு மேய்க்கச் செல்லும் போதெல்லாம்
அந்த ரேடியோவையும் எடுத்துச் செல்வேன் ,
பாடப்புத்தகங்களை படிக்கும்போதும் ரேடியோவை அருகிலேயே வைத்திருப்பேன்,
எனக்கு ரேடியோ என்பது ரேடியோ அல்ல இசைஞானி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அய்யா
கவிஞர் பாரிகபிலன்
02.06.2020

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X