முதல்வரை கேள்வி கேட்கும் கமல், விஷாலை கேட்காதது ஏன்?: எஸ்.வி. சேகர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன் விஷாலுக்கு எதிராக குரல் எழுப்பாதது ஏன் என்று நடிகர் எஸ்.வி. சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்க அரசுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் ட்வீட் செய்துள்ளார்.
எஸ்.வி. சேகர்
அரசையும், முதல்வரையும் கேள்வி கேட்கும் கமல் ஹாஸன் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் விஷயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் என்று எஸ்.வி. சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அறிவு
பொதுமக்கள் மேடையில் சினிமா குறித்து கேள்வி எழுப்பச் சொல்லும் எஸ்.வி சேகரின் அறிவை பார்த்து வியப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
கேள்வி
நீங்கள் சொல்வதை எல்லாம் கமல் செய்ய வேண்டியது இல்லை. அவருக்கு தோன்றுவதை தான் செய்வார். நீங்கள் உங்களின் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
கோபம்
எஸ்.வி. சேகரின் ட்வீட்டை பார்த்து கமல் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவரை காமெடி பீஸ் என்று விளாசியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











