வரேன்னு சொல்லியும் பிக் பாஸ் வீட்டுக்கு 'நைஜீரிய நயன்தாரா'வை ஏன் அழைக்கவில்லை?

By Siva

சென்னை: பிக் பாஸ் அழைத்தால் வரத் தயார் என்று தெரிவித்த நைஜீரிய நயன்தாராவை ஏன் போட்டியாளர் ஆக்கவில்லை.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி துவங்கிய நாளே பிக் பாஸ் வீட்டில் காதல் சீன் வந்துவிட்டது. அதே போன்று ரசிகர்களுக்கும் அதற்குள் சலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவர் மிஸ்ஸிங் என்பதை ரசிகர்கள் லேட்டாக உணர்ந்துள்ளனர்.

நந்தினி

நந்தினி

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சி பிரபலமான மைனா நந்தினி போட்டியாளராக வரப் போகிறார் என்று பேச்சு கிளம்பியது. இதையடுத்து அவரிடம் கேட்டதற்கு, நான் போட்டியாளர் இல்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்தால் செல்ல தயாராக உள்ளேன் என்றார். இதையடுத்து போட்டியாளர்கள் பட்டியலில் நந்தினியின் பெயர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மைனா

மைனா

பிக் பாஸ் வீட்டிற்கு போக வேண்டுமா, ஆள விடுங்க சாமி என்று பிரபலங்கள் தெறித்து ஓடும் நிலையில் அழைத்தால் வர நான் தயார் என்று கூறிய நந்தினியை ஏன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை கடந்த சீசனில் விஜயலட்சுமி வந்தது போன்று நந்தினியும் ஒயில்டு கார்டு மூலம் வருவாரோ?. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நைஜீரிய நயன்தாரா

அதென்னடா, தலைப்பில் நைஜீரிய நயன்தாரான்னு போட்டிருக்க, குசும்பா?. எங்க தலைவி பெயரை நந்தினிக்கு எப்படி நீ பயன்படுத்தலாம் என்று கேட்கலாம். அட, நான் நந்தினியை அப்படி வர்ணிக்கவில்லை. விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அவரை ஒரிசாவில் இருந்து வந்த த்ரிஷா, பூனால இருந்து வந்த தமன்னா, நைஜீரிய நயன்தாரா என்று பில்ட்அப் கொடுத்துள்ளனர்.

ப்ரியங்கா தேஷ்பாண்டே

ப்ரியங்கா தேஷ்பாண்டே

முன்னதாக நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் நடுவர்களில் ஒருவராக இருந்த வாணி போஜனை பார்த்து நம்ம ப்ரியங்கா தேஷ்பாண்டே அக்கா சின்னத்திரை நயன்தாரா என்றார். தற்போது ப்ரியங்கா அக்கா முன்னிலையில் நந்தினியை நைஜீரிய நயன்தாரா என்றுள்ளனர். இதை பார்த்த நயன்தாரா ரசிகர்களோ, ரீல் விடுவதற்கும் ஒரு அளவே இல்லையாப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X